dc.description.abstract |
மனித இனமானது அதன் பரிணாம வளர்ச்சியினை அடையத் தொடங்கிய காலத்திலிருந்தே கல்வியும் வளர்ச்சியடைந்து
கொண்டு வருகின்றது. அந்த வகையில் பாடசாலை, பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கலைத்திட்டங்களிற்
பொருளியற்கல்வி கடந்த காலங்களில் வேகமான விருத்தியைப் பெற்றுள்ளது. அண்மைக்காலங்களில் எல்லோராலும்
சிலாகித்துப் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயமாக யாழ்ப்பாண மாவட்டத்துப் பாடசாலைகளினது கல்வித் தராதரத்திலான
சரிவு அல்லது தேக்கநிலை காணப்படுகின்றது. இதனால்; பொருளியல் பாட பெறுபேறுகளில் செல்வாக்குச் செலுத்தும்
காரணிகள் (வடமராட்சிப் பிரதேச பாடசாலைகளை மையமாகக் கொண்ட ஆய்வு) என்பதில் பொருளியல் பெறுபேறுகளில்
செல்வாக்குச் செலுத்தும் காரணிகள், பெறுபேறுகளைப் பாதிக்கும் காரணிகள், பெறுபேறுகளை மேம்படுத்த சில
வழிமுறைகளை முன்வைத்தல் போன்ற நோக்கங்கள் முன்வைக்கப்பட்டன. ஆய்வுப் பிரதேசத்தில் மாணவர்களின்
பெறுபேற்றை நிர்ணயிக்கும் காரணிகள் பல உள்ளன. அவற்றில் குடும்ப வருமானம், சுயமாகத் தேடிக் கற்கும் ஆற்றல்,
பொருத்தமான ஆசிரிய வளம், போன்ற காரணிகளை எடுத்து அவற்றின் அடிப்படையில் கருதுகோள்கள்
முன்வைக்கப்பட்டு இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்ட கருதுகோளை பரிசீலிப்பதற்காக
வடமராட்சிப் பிரதேசத்தில் பொருளியல் பாடம் உள்ள பாடசாலைகளில் 25மூ ஆன பாடசாலைகளிலுள்ள 50மூ ஆன
மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக வினாக்
கொத்து, நேரடி அவதானம், நேர்காணல் என்பன பயன்படுத்தப்பட்டன. இவ் ஆய்வு ளிளள மற்றும் நஒஉநட மென்
பொருட்களின் துணையுடன் விபரணப் புள்ளிவிபரவியல் மூலம் பகுபாய்வு செய்யப்பட்டுள்ளது. தேவையான இடங்களில்
குறுக்கு வெட்டு, இணைவுக் குணகம், பிற்செலவு தரவுகளும் கையாளப்பட்டுள்ளது. இவ் ஆய்வில் குடும்ப
வருமானத்திற்கும் பொருளியல் பெறுபேற்றிற்குமிடையில் நேர்க் கணியத் தொடர்பு காணப்படுகின்றது. சுயமாகத்
தேடிக்கற்கும் ஆற்றலுக்கும் பொருளியல் பெறுபேற்றிற்கும் இடையில் நேர்க் கணியத் தொடர்பு காணப்படுகின்றது.
பொருத்தமான ஆசிரிய வளம் இருந்தால் பொருளியல் பெறுபேறு அதிகரிக்கும். போன்ற கருதுகோள்களின் முடிவுகள்
ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மாணவர் மத்தியில் பெறுபேறுகளை அதிகரிக்கச் செய்ய வேண்டுமாயின் மாணவர்கள்,
பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் சமூகம் என அனைவரும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து
முனைப்புடன் செயற்பட வேண்டும். |
en_US |