Abstract:
உலகில் பல நாடுகள் குறிப்பாக ஆசிய நாடுகள் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டு
செயற்படுகின்றன. இலங்கையின் அபிவிருத்தியில் விவசாய துறைக்கு பாரிய பங்கு உண்டு. நாட்டின்
மொத்த உற்பத்தி வருமானத்தில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானமும் ஒன்றாகும்.
இலங்கையைப் பொறுத்த வரையில் ஆரம்ப காலங்களில் மக்கள் விவசாயத்தை பிரதான
ஜீவனோபாயமாகக் கொண்டு வாழ்ந்தனர். அதற்காக நதிக்கரையோரங்களில் தமது குடியேற்றங்களை
அமைத்தனர். விவசாயத் துறையை முன்னேற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் பெருமளவான நிதியினை
ஒதுக்கி வருகிறது. விவசாயத்துறைக்கென்று பொறுப்பான அமைச்சுக்கள் காணப்படுகின்றன. இன்று
இலங்கையில் கிராம மற்றும் மாவட்ட மட்டங்களில் விவசாயத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்கள்,
விவசாயிகளை வலுவூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது
பல்வேறு நவீன விவசாய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்பக்காலத்திலே மாடுகளைக்
கொண்டு உழவூத் தொழிலினை மேற்கொண்டு வந்தார்கள். இப்போது நவீனப்படுத்தப்பட்ட ட்ராக்டர்
மூலமாக விவசாயத்தை செழிக்கச் செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கம்
விவசாயம் செழித்து வளர்வதற்காகப் பல்வேறு திட்டங்களையூம் ஆலோசனைகளையூம் சிறப்புற வழங்கிக்
கொண்டு வருகின்றது. இவ்வாய்வானது இயற்கை விவசாயம் மூலம் ஏற்படுகின்ற சாதகமான விடயங்கள்
மற்றும் செயற்கை விவசாயம் மூலம் ஏற்படுகின்ற பாதகமான விளைவூகள் போன்றவற்றை ஆராய்வதோடு
விவசாயிகள் ஏன் இயற்கை விவசாயத்தை விட்டு செயற்கை விவசாயம் செய்கின்றனர் என்பதை
ஆராய்வது இவ்வாய்வின் குறிக்கோளாகும். அத்தோடு இறத்தோட்டை பிரதேச விவசாயிகளின் விவசாய
முறைகளில் ஏற்பட்ட மாற்றம் எவ்வாறுள்ளது என்பதை ஆராய்வதோடு பாரம்பரிய விவசாய முறைகள்
எவ்வாறு நவீன விவசாய முறையாக மாறியூள்ளதென்பதையூம் விவசாயிகள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதையயும் இவ்வாய்வானது பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.
ஆய்வூக்கான தரவவுகள் பண்புரீதியான முறையில் (qualitative method) மூலம் பெறப்பட்டுள்ளதோடு
முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூலகங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்
தரவில் நேர்க்காணல்இ அவதானம், இலக்குக்குழு கலந்துரையாடல் என்பவற்றிலிருந்து
பெற்றுக்கொள்ளப்பட்டன. இரண்டாம் நிலைத்தரவில் இணையத்தள தகவல்கள், பிரதேச செயலக
அறிக்கைகள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் பெரும்பாலும் செயற்கை முறை
விவசாயத்தையே பயன்படுத்துகின்றனர். இதில் விவசாயிகள் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
இலங்கை அரசாங்கமானது வருடா வருடம் தயாரிக்கும் வரவு செலவு திட்டத்தில் அடிப்படை உணவவு
பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பாக விவசாயிகளின் நிலையை கருத்திற்கொள்ள வேண்டும்.