Abstract:
நீதிப் பரிபாலனத்தில் ‘காழி’ யின் நடத்தை பிரதான எண்ணக்கரு. இஸ்லாமிய சட்டத்துறை
இலக்கியங்கள் ‘காழி’யின் ஒழுக்கவியல் நடத்தை (‘ஆதாபுல் காழி’) பற்றி விரிவாக
விவாதித்துள்ளன. நீதிப்பரிபாலனம் பொருத்தமானதாகவும், வெளிப்படையானதாகவும்
அமைவதற்கு ‘காழி’யின் நடத்தை பற்றிய கரிசனை அவசியமாகும். இவ்வாய்வு
பண்புசார், அளவுசார் முறைமைகள் இரண்டையும் தழுவி இலங்கையில் ‘காழி’களின்
நடத்தையைப் பரிசீலனை செய்கின்றது. வினாக்கொத்தை பயன்படுத்தி வழக்காளிகள்
மற்றும் ‘காழி’களிடம் பெறப்பட்ட தரவுகள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடனான நேர்காணல்,
கள அவதானக் குறிப்புக்கள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களும் இங்கு
பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் கண்நோக்கை
அமைத்துகொள்வதற்கு அதன் மூலஆவணங்களையும் பிரதான இமாம்களின்
கருத்துக்களையும், நவீன கால அறிஞர்களின் சிந்தனைகளையும் துணையாகக்
கொள்ளப்பட்டுள்ளது. பெண் வழக்காளிகளை நடாத்துதல், அன்பளிப்புகளை ஏற்றல்
போன்ற ‘காழி’கள் சிலரின் நடத்தை குறித்த குறைகூறல்கள் உள்ள போதிலும்
அவர்களின் நல்லொழுக்கம், நடுநிலைமை, சமமாக நடாத்துதல் என்பன தொடர்பில்
பொதுவான சிறந்த மதிப்பீடு உள்ளது. இவ்வாய்வை காழிகளுக்கான முன்மாதிரி
நடத்தைக் கேவையாக அல்லது காழிகளின் நடத்தைசார் வழிகாட்டியாகக் கொள்ள
முடியும்.