dc.contributor.author |
Habeebullah, Mohamed Thamby |
|
dc.date.accessioned |
2019-06-20T10:30:26Z |
|
dc.date.available |
2019-06-20T10:30:26Z |
|
dc.date.issued |
2019 |
|
dc.identifier.citation |
Sri Lankan Journal of Arabic and Islamic Studies, 2(1): 43-56. |
en_US |
dc.identifier.issn |
2550:3014 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3560 |
|
dc.description.abstract |
இலங்கை சிங்களம், தமிழ், முஸ்லிம், கிரிஸ்தவம் ஆகிய சமூகங்களைக் கொண்டுள்ள
ஒரு பன்மைத்துவ நாடாகும். ஒவ்வொரு இனமும் இந்நாட்டில் தொன்மை வரலாற்றினைக்
கொண்டு காணப்படுவது அடையாளமிட்டுக் கூறப்பட வேண்டிய சிறப்பம்சமாகும். இலங்கை
பல்லின சமூகங்களைக் கொண்ட ஒரு நாடு என்ற ரீதியில் இனங்களிடையே
நல்லுறவுகளை பேணிக்காப்பதற்கான செயற்பாடுகள் தொன்மை காலத்திலிருந்தே அது
தொடங்கப்பட்டுவிட்டது எனலாம்.
இந்நாட்டில் காணப்படும் சமூகங்களை சமய, சமூக, அரசியல் ரீதியாக வழி
நடாத்தக்கூடிய பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சமூகத்தை சமய ரீதியாக
வழி நடாத்தக்கூடிய நிறுவனங்கள் அண்மைக் காலமாக இலங்கையில் சகல சமூக
மட்டங்களிலும் பெரும் செல்வாக்கு பெற்று வளர்ந்து வருவது அவதானிக்தக்க ஒரு
விடயமாகும். பொதுவாக இலங்கை வாழ் சமூகங்களைப் பொருத்தவரையில் அவர்கள்
சமய ரீதியான வழி காட்டல்களை மிகவும் அக்கரையோடும் முதன்மைப்படுத்தி
நோக்குவதுடன் அதனைப் பின்பற்றி வாழ்வதை புனிதமானதாகவும் மன நிம்மதியை
வழங்குவதாகவும் மிகவும் விருப்பத்துக்குறியதாகவும் நோக்குகின்றனர்.
இந்த வகையில் ”இலங்கை முஸ்லிம் சமூகத்தை சமய சமூக ரீதியாக வழி
நடாத்தக்கூடிய முக்கிய பலம் பொருந்திய நிறுவனங்களில் ஒன்றாகவும் மிக ஆரம்ப
காலத்திலேயே தோற்றம் பெற்று சமூகத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற ஒரு மகத்துவ
மிக்க உயர் சபையாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (Supreme council of
Muslim Theologians) விளங்குகிறது. இவ்வுயர் சபை இலங்கையில் மாகாண மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக 132 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டும் காணப்படுகின்றது.”1
கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கீழ்
இயங்கும் ஒரு கிளைச் சபையாகும். இவ்வுயர் சபை சுதந்தரத்திற்கு முற்பட்ட காலம்
முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக, சமய, பொருளாதார மற்றும் அரசியல்
முதலிய செயற்பாடுகளில் களமிறங்கி அதீத ஈடுபாடு காட்டி வருவது ஈண்டு குறிப்பிடப்பட
வேண்டிய ஒரு விடயமாகும். இலங்கையில் கடந்த காலங்களில் இடம் பெற்ற 30 வருட
உள்நாட்டு கோர யுத்தத்தினால் இனங்களிடையே முரண்பாடுகளும் ஒரு சமூகம் மற்ற
சமூகத்தை அச்சத்தோடும் பகைமை உணர்வோடும் நோக்கும் நிலையும் காணப்பட்டது.
இத்தகையதொரு மனோ நிலையை சமூகங்களிலிருந்து கலைந்து சுமூகமான நிலையையும்
சமதானம் மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற தூய்மையான
நோக்கத்தில் பல்வேறு மட்டங்களிலுள்ள சமூக, சமய அமைப்புக்கள் இலங்கையில் பல
பகுதிகளில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் முஸ்லிம்களின் சமய
உயர் சபையான கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா பல்லின சமூகங்களுக்கிடையே இன
நல்லுறவு, சமாதானம் என்பவற்றை; கட்டியெழுப்புவதில் திருகோணமலை மாவட்டத்திலும்
கிழக்கு மாகாண ரீதியிலும் பாரிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வகையில் இவ்வாய்வானது இவ்வுயர் சபையின் இனநல்லுறவு, சமாதானச்
செயற்பாடுகளை அடையாளப்படுத்துவதுடன் மேலும் தற்போதைய சூழலில் குறித்த
இவ்விரு எண்ணக்கருக்களை கட்டியெழுப்புவதற்கு இவ்வுயர் சபை எவ்வாறான வலுவூட்டல்
நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளையும் உள்ளடக்கியதாக
காணப்படுகிறது. ஏனெனில் இனத்தின் பெயரால் வன்முறை சமூகங்களில் தலை
விரித்தாடிய போது அவற்றை தீர்ப்பதில் கடந்த காலங்களிலும் தற்போதைய சூழலிலும்
கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.
எனவே இவ்வாய்வு முதலாம் நிலைத்தரவுகள், இரண்டாம் நிலைத்தரவுகள் ஆகியவற்றை
ஆய்வு மூலங்களாகக் கொண்டு பண்புசார் பகுப்பாய்வு முறையில் கொள்ளப்படுகின்றன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Islamic Studies & Arabic Language, South Eastern University of Sri Lanka. |
en_US |
dc.subject |
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா |
en_US |
dc.subject |
கிண்ணியா |
en_US |
dc.subject |
இனநல்லுறவு |
en_US |
dc.subject |
சமாதானம் |
en_US |
dc.title |
இன நல்லுறவு, சமாதானம் என்பவற்றை கட்டியெழுப்புவதில் முஸ்லிம் சமய நிறுவனங்களின் பங்களிப்பு: கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமாவின் இன நல்லுறவு சமாதானச் செயற்பாடுகளை மையப்படுத்திய ஓர் ஆய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |