Abstract:
புவி மேற்பரப்பில் காணப்படுகின்ற இயற்கை மூலவளங்களுள் நீர் மிக முக்கியமான வளமாகக்
காணப்படுகின்றது. நீரானது மனித உயிர் வாழ்க்கைக்கும் அதனோடு இணைணந்த ஏனைய
செயற்பாடுகளுக்கும் அவசியமானதாகக் காணப்படுகின்றமையால் புவி மேற்பரப்பில் காணப்படுகின்ற
இயற்கை வடிநிலங்களையும் நீர் நிலைகளையும் பேணிப்பாதுகாத்தல் அவசியமானதாகும். ஆனால் இன்று
அதிகரித்து வருகின்ற சனத்தொகைப் பெருக்கம்இ கிராமநகர அபிவிருத்திசெயற்பாடுகள்இ முறையற்ற
நிலப்பயன்பாடுகள் யுத்த நடவடிக்கைகள் போன்ற பல்வேறு செயற்பாடுகளினால் இயற்கை
வடிநிலங்களும் நீரேந்துபகுதிகளும் பேணிப்பாதுகாக்கப்படாது காணப்படுகின்றன. இதனால் இயற்கை
வடிநிலங்களின் போக்குகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வெள்ளம்இ வரட்சி போன்ற இயற்கை
அனர்த்தங்களினால் சமூக பொருளாதார சூழலியல் ரீதியாக பல்வேறு தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு
வருகிறது. இத்தகைய தாக்கங்களைக் குறைக்கவேண்டுமாயின் இயற்கை வடிநிலங்களின் போக்கில்
காணப்படும் அவற்றுக்கு ஒவ்வாத நிலப்பயன்பாடுகளை அடையாளம் செய்தல் அவசியமாகும்.
அண்மைக்காலங்களில் விருத்தியடைந்து வரும் தொலையுணர்வுத்தொழில்நுட்பம் மூலம் இயற்கை
வடிநிலங்கள் தொடர்பான தரவுகள் பெறப்பட்டு ஆய்வுகள் இடம்பெற்றுவருகின்றது. அந்த வகையில்
இலங்கையின் வட மாகாணப் பெருநிலப் பரப்பினைப் பொறுத்த வரையில் அதிகமான வடிநிலங்களும்
நீரேந்துப் பகுதிகளும் காணப்படுகின்ற போதும் அவை ஒவ்வொன்றும் அடையாளப்படுத்தப்படாமலும்
படமாக்கப்படாமலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஸ்ரர் தரையுயர மாதிரியைப்
பயன்படுத்தி ஆய்வுப் பிரதேசத்தில் காணப்படுகின்ற வடிநிலங்களையும் நீரேந்துப் பகுதிகளையும்
அடையாளப்படுத்துவதுடன் இயற்கை வடிநிலங்களின் போக்கிற்கு ஒவ்வாத நிலப்பயன்பாடுகளை
கண்டறிவதனையும் நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில்
தரையுயரத்தரவு மாதிரி பயன்படுத்தப்பட்டு இயற்கை வடிநிலப்பாங்கு அடையாளப்படுத்தப்பட்டது. 2018
ஆம் ஆண்டிற்குரிய நிலப்பயன்பாட்டு படம் உருவாக்கப்பட்டு வடிநிலங்களிலிருந்து 500 மீற்றரில்
எல்லைப்படுத்தப்பட்ட வடிநிலங்களால் மேற்படிவு செய்யப்பட்டு இயற்கை வடிநிலப்போக்கிற்கு ஒவ்வாத
நிலப்பயன்பாடுகள் அடையாளப்படுத்தப்பட்டன. இதன் பிரகாரம் 6.7 வீதமான கட்டிடங்களும்
குடியிருப்புக்களும் மற்றும் 6.1 வீதமான விவசாய நிலங்களும் இயற்கையான வடிநிலப்போக்கின்
இயல்பான ஓட்டத்தை தடுப்பனவாக அடையாளப்படுத்தப்பட்டன. அந்தவகையில் இவ் ஆய்வானது
நிகழ்கால மற்றும் எதிர்கால நிலப்பயன்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு; வடிகாலமைப்பு தொடர்பான
செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் முகாமை செய்வதற்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில்
ஐயமில்லை.