Abstract:
கிண்ணியாப் பிரதேசம் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்
பெரும்பான்மையைக் கொண்டு அமைந்துள்ள ஒரு தொன்மை வரலாற்றுப் பிரதேசமாகும். இது
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தை அண்டிய பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளதுடன் அது
எல்லா வகையிலும் வளங்கொழிக்கும் பிரதேசமாகவும் மானிட சமூகத்திற்கு தேவையான சகல
வளப்பரம்பலையும் நிரப்பமாகக் கொண்டும் அமையப்பெற்றுள்ளது. இந்த ஆய்வானது திருகோணமலை
மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தின் பூர்வீக வரலாறு மற்றும் அதனூடே வளர்ச்சியடைந்து வந்துள்ள
சமூகப்பண்பாடுகள் என்பவற்றை மையப்படுத்திய வகையில் அமைந்துள்ள ஓர் ஆய்வாகும். கிண்ணியாப்
பிரதேச வரலாறானது பல்வேறு கால கட்டங்களில் திருகோணமலை துறைமுகத்தையொட்டி நிகழ்ந்த
மாற்றங்களின் பின்புலங்களின் அடிப்படையில் அமைந்த குடியேற்றங்கள் என்பதை அறிய முடிகின்றது.
இக்குடியேற்றங்களானது மத்திய ஆசியா, ஆபிரிக்கா, கிழக்காசியா மற்றும் தென்னாசியா போன்ற
நாடுகளிலிருந்து வியாபார நோக்கத்திற்காகவும், வேறு பல நோக்கங்களிற்காகவும் வந்தவர்கள் என்றும்
இவர்களின் வரலாற்றை ஆராயும் போது அறிய முடிகின்றது. இவ்வாறு வந்து குடியோறிவர்களாலும்
உள்ளுர்வாசிகளாலும் ஒருங்கிணைந்த ஓரு பண்பாட்டு வரலாறு தோற்றம் பெறுவதையும் அதுவே
கிண்ணியா பிரதேச வரலாறாகவும் பண்பாடாகவும் அமைகின்றது என்பதை இவ்வாய்வு
எடுத்துரைக்கின்றது.