Abstract:
ஐரோப்பிய தத்துவ மரபில் அதிகம் பேசப்பட்ட எண்ணக்கருவாக
சுதந்திரம் காணப்படுகிறது.இருபதாம் நூற்றாண்டின் இருப்பியல் சிந்தனையாளரான
ஜீன் பவுல் சாத்ரே மனிதசுதந்திரம் பற்றி அதிகம் பேசியவராவார். அவர் சுதந்திரம்
என்பதை மனிதப் பிரக்ஞையின் அடிப்படைப் பண்பாக கருதுகிறார். மனிதன்
வரையறையற்றவன், அவன் சுதந்திரமானவன் என்பதன் மூலம் அவன் எதுவாக
இருக்க வேண்டும் என்பதை அவனேதான் நிர்ணயித்துக் கொள்கிறான் என்கிறார்.
இதற்கு மாற்றமான ரீதியில் பின்நவீனத்துவ சிந்தனையாளர் பூக்கோவின்
கருத்துக்கள் அமைந்திருந்தன. பூக்கோவின்படி மனிதர்கள் சுதந்திரமானவர்கள்
அல்ல. அவர்கள் அதிகாரத்தின் உரையாடலால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள்,
அதிகாரம் எப்போதும் அவர்களை ஒழுங்கு படுத்திக்கொண்டேயிருக்கிறது என்றார்.
இது,‘மனிதன் தன் சுதந்திரத்தை மறுத்து தான் ஏதோவொரு வகையில்
கட்டுப்படுத்தப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறான்’ என்ற சாத்ரேயின்
விளக்கத்தை பூச்சியமாக்கி இருக்கிறது. அதாவது தீர்மானிக்கப்பட்ட
எல்லைக்குள்ளேயே மனித செயற்பாடுகள் அமைகின்றன அல்லது அதிகாரம்
தனக்கான உரையாடலை நிகழ்த்துவதன் மூலம் மனிதனது தெரிவுகளையும் அதுவே
தீர்மானிக்கிறது என்கிறார் பூக்கோ. இவ்வகையில் இவ்வாய்வானது ஒன்றிற்கொன்று
முரணான இவ்விரு சிந்தனைகளின் ஒளியில் மனித சுதந்திரத்தின் சாத்தியப்பாடு
குறித்து ஆராய்கிறது.