Abstract:
காலத்தின் கண்ணாடிகளே கவிதைகளாகும். சமூகத்திலுள்ள
பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பங்களிப்பை கவிதைகள்
இங்கிதமாக செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில்
பாவலர் பசீல் காரியப்பரின் கவிதைகள் தனித்துவம் வாய்ந்ததாகும். ஆய்வுப்
பிரதேசத்தில் பல்வேறு கவிதைத் தொகுப்புகள் நுணுகி ஆராயப்பட்டபோதிலும் பசீல்
காரியப்பரின் மேற்குறித்த ‘வருத்துவது’,‘இரணக்கோல்’,‘நட்டுமை போகவில்லை’
முதலிய விவசாயம் சார் கவிதைகள் சமூகத்தளங்களினால் தனித்துவமாக ஆய்வுக்கு
உட்படுத்தப்படவில்லை. இவ் ஆய்வு இடைவெளியினைப் பூரணப்படுத்துவதாக இவ்
ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்குறித்த கவிதைகளின் மூலம் கவிஞர் சுட்டிக்
காட்டுகின்ற சமூகப் பிரச்சினைகளை சமூகவியல் நோக்கில் ஆராய்வதே இவ்
ஆய்வின் நோக்கமாகும். இவ் ஆய்விற்காக ஆய்வாளனின் அவதானம், இரண்டாம்
நிலைத்தரவுகளான சஞ்சிகைகள், கட்டுரைகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வின் மூலம் கண்டு கொள்ளப்பட்ட விடயம் என்னவெனில் சமூகச்சட்டங்கள்,
கெடுபிடியான நடவடிக்கைகள் மாத்திரமன்றி இங்கிதமான மொழி மூலமும் சமூகப்
பிரச்சினைகளை வெளிச்சமிட்டுக் காட்டமுடியும் என்பதும் விவசாய சமூகத்தில்
நிலவுகின்ற குறைபாடுகளை சமூகவியல் கண்ணோட்டத்தில் நோக்கமுடியும்
என்பதுமாகும். மொழி எனும் கருவி மூலம் வெளிவரும் சமூகப் பிரச்சினைகளை
சிவில் சமூகத்தில் தெளிவான புரிந்துணர்வு மூலம் குறைத்துக் கொள்ளமுடியும்
என்றால் மிகையாகாது.