Abstract:
இலங்கையில் உள்ளூர் மட்டங்களில் ஏற்படும் மக்களது பிணக்குகளை உரிய
பிரதேசங்களிலே தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மத்தியஸ்த
சபையானது 1988ம் ஆண்டு 72ம் சட்டத்தின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று
நாடு முழுவதும் 329 மத்தியஸ்த சபைகள் 8,735 மத்தியஸ்தர்களைக் கொண்டு பிரதேச
செயலகப் பிரிவுகளில் செயற்படுகின்றன. இச்சபைகளுக்கு நிரந்தர இடமின்மை மற்றும்
பொருத்தமான அமைவிடமின்மை என்பன பாரிய சவால்களாக உள்ளன. இதற்கு
அம்பாரை மாவட்ட மத்தியஸ்த சபைகள் விதிவிலக்கல்ல. இதனடிப்படையில் அம்பாரை
மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மத்தியஸ்த சபைகளுக்கான நிரந்தர இடமின்மை
மற்றும் அமைவிடம் சார் பிரச்சினைகளை ஆய்வு செய்வதாகவும் அதனைத்
தீர்ப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதாகவும் இவ்வாய்வு அமைந்துள்ளது.
இதற்காக பண்பு மற்றும் அளவு ரீதியான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன்
இதற்கான தரவுகள் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளிலிருந்து
பெறப்பட்டுள்ளன. தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததிலிருந்து ஆய்வுப் பிரதேசத்தில்
காணப்படும் மத்தியஸ்த சபைகளின் நிரந்தர இடமின்மை மற்றும் அமைவிடம் சார்
பிரச்சினைகள் காரணமாக மத்தியஸ்த சபைகள் பல்வேறு சவால்களை
எதிர்கொள்வதனை ஆய்வினூடாக கண்டுகொள்ளப்பட்டுள்ளது. அதனால் குறித்த
மத்தியஸ்த சபைகளின் செயற்றிறன்மிகு வகிபாகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.