Abstract:
ஒவ்வொரு சமூகமும் தனக்கென ஒரு தனித்துவமான வாழ்க்கை முறையை கொண்டு
விளங்குகின்றது. இவ் வாழ்க்கைமுறை அந்தந்த சமூகங்களுக்குரிய பண்பாட்டின்
அடையாளங்களாகவும் வெளிப்படுகின்றன. குறிப்பிட்ட மக்கட் சமூகத்துடன் ஒன்றி வாழும்போது
அவர்தம் பண்பாட்டை எவ்வளவு தூரம் அறிய முடியுமோ அது போல குறிப்பிட்ட சமூகத்தின்
வெளிப்பாடான இலக்கியங்களைக் கொண்டும்; அறிய முடியும். இதற்கு மலையக இலக்கியங்களும்
விதிவிலக்கல்ல. பெருந்தோட்ட உற்பத்திக்காக பிரித்தானியரால் அழைத்துவரப்பட்ட இம்மக்கட்
சமூகம் தென்னிந்திய கிராமியச் சூழலிருந்து விடுபட்டு, மலைநாட்டுப்பகுதிகளிலில் வாழும் நிலை
நேரிட்டது. இவர்கள் மத்தியில் விரவி காணப்படும் பண்பாட்டு கூறுகள் இலங்கையில் வாழும் ஏனைய
தமிழ்ச் சமூகங்களுடன் ஒப்பிடும்போது சில வகையில் ஒன்றுபட்டும், பல வகையில்
தனித்துவமுடையதாகவும் விளங்குகின்றது. எனவே இம் மக்கட் சமூகத்தின் பண்பாட்டுப் பதிவுகளை
ஆவணப்படுத்த வேண்டிய கடப்பாடு ஆய்வாளர் மத்தியில் முக்கியத்துவப்படுத்தப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் இவ் ஆய்வுக் கட்டுரையானது மலையக மக்களின் தனித்துவமான பண்பாட்டை
தேர்ந்தெடுக்கப்பட்ட மலையகச் சிறுகதைகளின் வழி பதிவு செய்வதாக அமைகின்றது.
ஆய்வுமுறையியலாக விபரண ஆய்வு முறைமையும் பகுப்பாய்வு முறைமையும் பயன்படுத்தப்படுகின்றன.