Abstract:
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த சங்க காலத்திலே நில அடிப்படையிலான இயற்கையோடிணைந்த
மக்களுடைய வாழ்க்கையில் அகத்திணை, புறத்திணை என்ற பண்புகளின் உள்ளடக்கமாகவும்
பொழுதுபோக்கு, வழிபாடு காதல் என்று இக்கால ஆடற்கலை நிலவியிருந்ததனையும் இலக்கியங்கள்
சுட்டிக் காட்டுகின்றது. அந்த அடிப்படையில் குறிஞ்சி நிலத்தில் ஆடப்பட்ட ஆடல்களாக் குரவைக்
கூத்து, துணங்கைக் கூத்து போன்ற ஆடல்களையும் அவ் அவ் நிலத்தின் தன்மைக்கேற்ப ஆடல்களை
ஆடினர். இவ் ஆடல்களையும், ஆடல்களுக்குப் புனையப்பட்ட ஒப்பனை முறையினையும் மற்றும்
இசைக்கப்பட்ட இசைக் கருவிகளையும் குறிஞ்சி, மருத நிலங்களில் நோக்கப்படுகிறது.