Abstract:
இலங்கை தமிழ்மொழியினை தாய்மொழியாகக் கொண்ட இந்து, இஸ்லாம்,
கிறிஷ்தவ மதத்தைச் சார்ந்த பலரும் வாழும் ஓர் நாடு. அதிலும் பிரதானமானவர்களாக இந்துக்கள்
மற்றும் இஸ்லாமியரைக் குறிப்பிடலாம். இந்நாட்டிலுள்ள இவ்வினங்களுக்கிடையிலான நல்லுறவிலயே
இந்நாட்டின் மேம்;பாடும் முன்னேற்றமும் தங்கியுள்ளது. அந்த வகையில் இந்நாட்டில் வழும் பௌத்த,
இந்து, இஸ்லாமியர் மத்தியில் காலங்காலமாக நல்லிணக்கமும் புரிந்துணர்வும் நிலவி வந்த போதிலும்
கடந்த சில தசாப்தங்களாக நிலவிய அசாதரண சூழ்நிலை காரணமாக இந்நிலை சீர்குழைந்துள்ளது.
அதன் விளைவாக இந்நாடு பல்வேரு சிக்கல்களையும் பின்னடைவயும் சர்வதேச நாடுகளுக்கு
மத்தியில் தவறான எண்ணக்கருவையும் கொண்டுள்ளது. யுத்த நிலமைகள் முடிவுக்கு கொண்டு
வரப்பட்ட போதிலும் இனங்களுக்கிடையே சுமுகமான நிலை தோன்றியதாகத்தெரியவில்லை.
கசப்புணர்வும் பகைமையும் வெறுப்பும் சந்தேகமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்தவகையில்
ஒரே மொழியை தம் தாய்மொழியாகக் கொண்ட இரு இனத்தவரிடையே சமூக, இன முரண்பாடுகள்
தோன்றுவதில் தன்னினப்பற்றும் மாற்று மத புரிந்துணர்வும் எவ்வகையான தாக்கத்தை
செலுத்துகின்றது. என்பது பற்றி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி
இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. படிப்பறிவு மிக்க சமூகத்தவரைக்கொண்டு ஆய்வு
நடாத்தப்பட்டதற்கு காரணம் முடிக்கு வரக்கூடிய சிறந்த பதில்களைப் பெறலாம் என்ற நோக்கிலும்
கேட்கப்பட்ட கேள்வியின் ஆழத்தன்மையினை புரிந்து கொண்டு பதிலளிப்பர் என்ற நம்பிக்கையிலும்
எதிர்காலத்தின் சமூக நிறுவுனர்கள் அவர்களே என்பதனாலுமே இப்பல்கலைக்கழக மாணவர்களை
மையப்படுத்தி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக இப்பல்கலைக்கழகத்திலிருந்து எழுமாறாக
பல்வேறு இனத்தைச்சேர்த 40 மாணவர்களைக் கொண்டு இவ் ஆய்வு நடாத்தப்பட்டதுடன் இவ் ஆய்வு
தொகை ரீதியான தரவுகளைக்கொண்டதாக அமைந்துள்ளதுடன் வினாக்கொத்து முறையிலும் தரவுகள்
திரட்டப்பட்டுள்ளன. இவ்வாய்விற்கு முதலாம் தர மற்றும் இரண்டாம் தர தரவுகள் சேகரிக்கப்பட்டு
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்றைய சமூகத்தில் தமிழ் பேசும் மக்களிடையே இன முரண்பாடுகள்
தோன்றுவதற்கு தம் மதத்தின் மீதான அடிப்படை அறிவின்றிய தன்னினப்பற்றும் மாற்று மதத்தின்
கொள்கைகள் மற்றும் அம் மதம் சார்ந்த விடையங்களில் தெளிவான புரிந்துணர்வின்மையுமே
காரணமாகும் என இவ் ஆய்வின் ஊடாக கண்டறியப்பட்டதோடு, மாற்று மதம், மக்கள் பற்றிய
கண்ணோட்டங்களையும் அவர்களுடன் நடந்து கொள்ளவேண்டிய முறை பற்றியும் தன்
மதக்கருத்துக்களினூடாக ஆராய்ந்து அறிவு பெருவதோடு மாற்று மதம் மற்றும் கொள்கைகள் பற்றிய
தெளிவான புரிதல் இருப்பதும் அவசியம். என்ற கருத்துக்களும் தீர்வுகளாக முன்வைக்கப்பட்டன.