Abstract:
இவ்வாய்வுக் கட்டுரையானது காத்தான்குடியின் சமூக
பண்பாட்டுத் தனித்துவமும் மட்டக்களப்பு தமிழ் சமூகத்தினுடனான ஒப்பீடும் என்ற
அடிப்படையில் அமைகின்றது. இவ்வாய்வானது மட்டக்களப்பில் வாழும் முஸ்லிம்
குடியிருப்புகளில் காத்தான்குடியை முன்னுதாரணமான குடியிருப்பாகவும்
தனித்துவமான இஸ்லாமிய சூழலைக்கொண்ட ஒரு பிரதேசமாவும்
அடையாளப்படுத்தி அதனூடாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின்
தனித்துவத்தையும் வரலாற்றையும் எடுத்துக்காட்ட முயல்கின்றது. அத்தோடு
இவ்வாய்வுக் கட்டுரையின் கருதுகோளான “காத்தான்குடி முஸ்லிம்களின் பண்பாட்டுத்
தனித்துவம்” என்ற வினாவிற்கு விடைகாண முற்படுகின்றது.அதற்காக மனிதர்களின்
வாழ்க்கை வட்டச் சடங்குகளான பிறப்பு, திருமணம், இறப்பு, என்ற மூன்று
பாண்பாட்டுக் கூறுகளை இப்பிராந்தியத்தில் இஸ்லாமியர்களுடன் இரண்டறக் கலந்து
வாழும் தமிழ் சமூகத்துடன் ஒப்பிட்டுக்கூறி இங்கு காணப்படும் பண்பாட்டுக்
கூறுகளின் ஒற்றுமை, வேற்றுமை, தனித்துவம் யாவை என்பதை விபரிக்க
முற்படுகின்றது.