Abstract:
இந்திய கலாசார. நாகரிக. சமய, வழிபாட்டு முறைகளைப் பற்றிய
ஆராய்ச்சிகளின் வளர்ச்சி ஓட்டத்தின் உச்சக்கட்ட காலமாக பத்தொன்பதாம்
நூற்றாண்டைக் குறிப்பிடலாம். இக்காலகட்டத்தில் மேற்கத்தைய அறிஞர்கள் பலர்
கீழைத்தேய கலாசார, சமூக, சமய வழிபாடுகளைப் பற்றி அறிய பேரார்வம்
கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இவர்களில் குறிப்பிட்டுக் கூறப்படுபவர் மக்ஸ்
முல்லர் (ஆயஒ ஆரடடநச) ஆவார். வேதகாலரிஷி என சுவாமி விவேகானந்தரால் சுட்டப்பட்ட
மக்ஸ் முல்லர் “நமது அகவாழ்வு நிறைவானதாகவும், உயரிய மன
இயல்புடையதாகவும் இருக்க வேண்டுமாயின் இந்திய தத்துவ நூல்களை படிக்க
வேண்டியது இன்றியமையாததாகும்” என்றார். இந்துமத மூல நூல்களாகிய வேதம்,
புராண, இதிகாசங்கள், உபநிடதங்கள், தர்மசாத்திரங்கள் தொடர்பான இவரது ஆய்வு
சிறப்பு மிக்கவை. இந்து மத மூலங்களை உலகறியச் செய்ததில் மேற்கத்தயவர்களின்
வகிபங்கை உணர்ந்தறிதல்., இதன் மூலம் குறிப்பிட்ட சமூகம்சார்
சமயம்,அதன்வழிபாடுகள்,பண்பாட்டம்சங்கள் ஆகியவற்றின் உலகமயமாக்கல்
அச்சமூகத்திற்கு எத்துணை அவசியம் என்பதனைக் கண்டறிதல் என்பன இவ்வாய்வின்
நோக்கங்களாகும். இந்துப் பண்பாட்டம்சங்களை உலகமயமாக்கலுக்கு உட்படுத்துவதில்
இந்துமத வடமொழி, தென்மொழி இலக்கியங்களை விட மேற்கத்தயவர்களின்
ஆய்வுகள் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன என்பது ஆய்வுப் பிரச்சினையாக
உள்ளது. இவ்வாய்வில் முதனிலைத் தரவுகளான மக்ஸ்முல்லரின் கடிதங்களும் மூல
நூல்களும் பகுப்பாய்வுக்குட்படுத்தபடுவதோடு இதில் வரலாற்றியல் ஆய்வும்
பயன்படுத்தப்படுகின்றது. இவற்றின் மூலம் இந்துமதம் சார் இலக்கியங்களை உலகுக்கு
அறிமுகம் செய்ததிலும், இந்துப் பண்பாட்டம்சங்களை வளர்த்தெடுத்ததிலும்
முன்னோடியாக விளங்கிய மேற்கத்தய ஆய்வாளர் மக்ஸ்மியூலராவார் எனும் முடிவினை
பெறமுடிகின்றது.