Abstract:
கிழக்கு மாகாணத்தில் எழில்கொஞ்சும் கரையோர மாவட்டமாக
மட்டக்களப்பு மாவட்டம் அமைந்துள்ளது. இது 14 பிரதேச செயலகப் பிரிவுகளைக்
கொண்டு காணப்படுகின்றது. இதில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவும்
ஒன்றாகும். இது வடமேற்கே ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவையும், தெற்கு
எல்லையாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவையும் கிழக்கே
மட்டக்களப்பு வாவியையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது. இது 24 கிராம
சேவகர் பிரிவுகளையும் 116 கிராமங்களையும் கொண்டுள்ளது. மட்டக்களப்பு
மாவட்டசெயலகத்தின் புள்ளிவிபர அறிக்கையின் படி 2017 ஆம் ஆண்டின் மொத்த
சனத்தொகை 32286 பேர் ஆகும். பிரதேசத்தில் இப்பிரதேசம் 292.7 சதுர கிலோமீற்றர்
பரப்பில் அமைந்துள்ளது. கடந்த காலத்தில் யுத்த நிலைமைகளின் தாக்கத்திற்கு
உட்பட்டு இருந்த இப்பிரதேசம் மிகவும் பின்தங்கிய கிராமங்களை உள்ளடக்கிய
பிரதேசமாக காணப்படுகின்றது. இவ்வாய்வானது மட்டக்களப்பு மாவட்டத்தில்
மண்முனை மேற்கு பிரதேசத்தின் வறுமைத்தாக்கம் தொடர்பான ஆய்வாக
காணப்படுகின்றது. இவ்வாய்வின் நோக்கங்களாக ஆய்வுப்பிரதேசத்தில் வறுமை
நிலைமையினைக் கண்டறிதல், வறுமைக்கான அடிப்படைக் காரணிகளை கண்டறிதல்
என்பன காணப்படுகின்றன. இவ்வாய்வானது அளவைசார் பகுப்பாய்வு நுட்ப முறைமை,
பண்புசார் பகுப்பாய்வு நுட்ப முறைமை, மற்றும் புவியியல் தகவல் முறைமைக்கூடான
இடரீதியான பகுப்பாய்வு முறைமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரசேத்தில் முதனிலைப் பொருளாதார
நடவடிக்கைகள் காணப்படல், பருவகாலவேலையின்மை காணப்படல், தாழ்வருமானம்,
தங்கிவாழ்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைந்தளவான சுகாதார வசதிகள்
காணப்படல், கல்வியறிவு வீதம் குறைவாக காணப்படல், குறைவான போக்;குவரத்து
வசதிகள் காணப்படல், குடிநீர்ப்பற்றாக்குறை, வீட்டுவசதிப்பிரச்சினைகள்,
பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள், பெண்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குச்
செல்லல், மின்சார, தொடர்பாடல் வசதிகள் பற்றாக்குறை போன்றன வறுமை நிலைமை
நிலவுவதற்கான பிரதான காரணிகளாக காணப்படுகி;னறன. இதனால் இப்பிரதேச மக்கள்
பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். இவ்வாறான விடயங்களை
உள்ளடக்கியதாக இவ்வாய்வு காணப்படுகின்றது.