Abstract:
ஏழிசைகள் மனிதனுடைய உடம்பில் தோன்றுகின்றது. மனித
வாழ்க்கையோடு ஒலியானது மகத்தான பங்காற்றுவதை உணர முடிகிறது. வாழ்க்கைத்
தத்துவத்தோடும், இசை இணைந்து செயலாற்றுகின்றது. மனிதனுடைய ஸப்த ஸ்வர
நாடிகள் வேலை நிறுத்தும் போது மனிதன் செயலற்றவனாக மாறுகிறான். மனிதனை
சிந்திக்க வைக்கின்ற இசை, அவனை வேகமாகச் செயல்படவும் தூண்டுகிறது. இசையோடு
கூறப்படும் அறிவுரைக்கு அதிக சக்தி உண்டு. நரம்பு மண்டலத்தைக் கவர்ந்து விடுகின்ற
இசையானது அதனோடு தொடர்பு கொண்ட வார்த்தைகளையும் இதயத்தில் வார்ப்படம்
செய்து வைத்துக் கொள்ளும். மனிதனுடைய சரீரமும், வாத்திய இசையும் என்று
நோக்குகையில் கருவியிசை, குரலின் வழி நிற்க வேண்டியதொன்று என்று
குறிப்பிடப்பட்டுள்ளது, கடவுளை கண்ட யோகிகள் சொன்ன உண்மை இறைவனை
வணங்கும் சரீர நிலை பேணப்படல் வேண்டும் என்றும், உயிருடம்;பிற்கும் இசைக்கும்
உள்ளத் தொடர்பு பற்றி அறியப்பட்டுள்ளது. சரீர இசையும், கருவியிசையும், மனிதனுடைய
சுவாசத்திற்கு ஒத்திருக்கும் யாழ் ஓசையின் அலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடநூற்களில் காணப்படும் குறிப்புக்கள் ஆதாரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இசையின்
துணைக் கொண்டு உடலினை கட்டுப்படுத்தும் யோகாவான ரிதமிக் யோகா , டைனமிக்
யோகா ஆகிய யோகாவைப் பற்றியும் இந்த யோகாவிற்கு பயன்படுத்தப்படும் பின் இசை
எப்படிப்பட்டவை, எந்தக் கருவியின் இசை பயன்படுத்தப்படுகின்றது என்பவை
குறிப்பிடப்பட்டுள்ளது.