Abstract:
சிரேஸ்ட இடைநிலை மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்கற் செயற்பாடுகளில் வெகுசனத் தொடர்பு சாதனங்களின்
கற்றல் மற்றும் கற்றல்சாரா செயற்பாடுகளின் பங்களிப்பானது எவ்வாறானதாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பதனை
இனங்காண்பதற்காக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை அடிப்படையாகக்
கொண்டு இவ் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. கற்றல் கற்பித்தல் முன்னெடுப்புக்களில் தற்காலத்தில் பங்களிப்புச் செய்யும்
வெகுசனத்தொடர்பு சாதனங்கள் குறிப்பாக சிரேஸ்ட இடைநிலை மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் தாக்கங்கள்
ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாட்டில் தொடர்புசாதனப் பிரயோகங்களின் பாவனை மற்றும் மாணவர்களின்
நடத்தைகளில் ஏற்படுத்தும் மாற்றங்கள், நடத்தை மாற்றத்தினால் ஏற்படுத்தும் அறை கூவல்கள் என்பவற்றினை
ஆராய்வதற்காக கற்றல் கற்பித்தலில் வெகுசனத்தொடர்பு சாதனங்களின் செயற்பாடுகள் பற்றி அறியப்படுவது
அவசியமானதாகும். கல்விச் சமூகமயமாக்கலில் வெகுசனத்தொடர்பு சாதனங்கள் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கின்ற
வேளையில் உரிய முறையில் கண்காணிப்பின்மை, பயன்படுத்துவதில் தப்பான வழிகளில் செல்லல் போன்ற
காரணங்களினால் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றது. ஆசிரியர்களினுடைய
அர்ப்பணிப்பற்ற கற்பித்தல் செயற்பாடுகற்பித்தலில் வெகுசனத்தொடர்பு சாதனங்களின் பங்காற்றுகை வெகுசனத்தொடர்பு
சாதனங்களின் கற்றல் இடறுகைகள் என்பனவற்றிற்கான தீர்வினை வழங்குவதன் மூலம் வெகுசனகற்றலின் மூலமான
சிறந்தகற்றல் முன்னேற்றங்களைப் பெறமுடியும். கற்றலுக்காக புதிய தொழிநுட்பத்துடனான கல்விச்செயற்பாடுகளை
முன்னெடுப்பது அவசியமானது எனினும் பிரயோகிக்கப்படும் விடயத்தினுடைய தார்ப்பரியத்தினை தெளிவாக புரிந்து
பயன்படுத்தக்கூடிய திறனை குறிப்பிட்ட பிரதேசத்தின் மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்குடன் இவ்வாய்வு
மேற்கொள்ளப்படுகிறது. இதனைக் கண்டறிந்த பெற்றோர்களும் சிரேஸ்ட இடைநிலை மாணவர்களிடையே அதிகமாகக்
காணப்படுகின்ற பிடிவாதம், முன்கோபம், தர்க்கம் புரிதல் என்னும் மனவெழுச்சிகளால் குறித்த விடயத்தினைச்
சுட்டிக்காட்டி நெறிப்படுத்த தயங்கும் நிலை காணப்படுகின்றது. பாடசாலையில் கட்டுப்பாடுகளை வழங்குகின்ற போதும்
மாணவர்கள் வீட்டுச்சூழலில் இதனை தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதனால் குறித்த மாணவர்களின் கல்வித்தரமானது
வீழ்ச்சிப்போக்கினைக் கொண்டிருப்பதுடன் நடத்தை மாற்றங்கள் சமூகத்திற்கு ஒவ்வாத வடிவில் உருவாக்கப்பட்டுக்
கொண்டுள்ளமை கண்கூடு. இந்த வகையில் வெகுசனத்தொடர்பு சாதனங்கள் சிரேஸ்ட இடைநிலை மாணவர்களின்
கல்வித்தரத்தினையும் நடத்தை மாற்றத்தினையும் பெருமளவு மாற்றமடையச் செய்து வருவதுடன் இத்தகைய தொடர்பு
சாதனங்கள் குறித்த தெளிவான அறிவின்றி மாணவர்கள் அதிக பயன்பாட்டில் ஈடுபடுவதும் வெகுசனத்தொடர்பு
சாதனங்கள் பயன்படுத்துகின்ற மாணவன் மற்றைய மாணவனையும் தூண்டி இந்த வெகுசனத்தொடர்பு சாதனங்களுள்
உள்வாங்கிக் கொள்வதால் இளம் மாணவ சமூகம் தம் இலக்கினையும் கல்வியையும் சிறப்பாக சீரிய நடத்தைகளையும்
தவற விடும் இக்கட்டான நிலையினின்று விடுபட வேண்டும் என்ற நோக்குடன் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது.