SEUIR Repository

இலங்கைத் தமிழர் பிரச்சினையும் கருணாநிதியும் : ஒரு வரலாற்றுப் பார்வை

Show simple item record

dc.contributor.author அருந்தவராஜா, க.
dc.contributor.author சிவகுமார், மங்களரூபி
dc.date.accessioned 2019-07-20T04:56:18Z
dc.date.available 2019-07-20T04:56:18Z
dc.date.issued 2018-12-17
dc.identifier.citation 8th International Symposium 2018 on “Innovative Multidisciplinary Research for Green Development”. 17th - 18th December, 2018. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 1161-1169. en_US
dc.identifier.isbn 978-955-627-141-6
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3659
dc.description.abstract இலங்கையில் நிகழ்ந்து வருகின்ற தமிழர்களுடன் தொடர்புபட்ட இனப்பிரச்சினையென்பது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே ஆங்கிலேயர்களினால் திட்டமிடப்பட்டு அத்திவாமிடப்பட்ட ஒரு பாரிய பிரச்சினயாக இருந்து வருகின்றது. இறுதிப்போர் முடிந்த பின்பும் உரிமைக்கான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்து வருகின்றது. இது ஆங்கிலேயர்களது ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலணித்துவ நாடுகள் பலவற்றில் அவர்கள் கையாண்ட பிரத்தாளும் தந்திரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றது. நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னராக உக்கிரமடைந்த இலங்கையின் இனப்பிரச்சினையின் தாக்கமானது அயல் நாடான இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் செல்வாக்கினைச் செலுத்த ஆரம்பித்தமையின் பின்னணியில் இந்தியாவும் இலங்கையின் இனப்பிரச்சினையில் தனது தேச நலன் கருதி மூக்கினை நுழைக்க ஆரம்பித்தது. அவ்வகையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.இராமச்சந்திரன், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் இலங்கையின் இனப்பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்ட தமிழக முதல்வர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களில் கருணாநிதியினைத் தவிர மற்றைய இருவரும் தி.மு.க கட்சியினைச் சாராதவர்கள். அவ்வகையில் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்த ஐந்து தடவைகளில் 4 தடவைகள் இலங்கையின் இனப்பிரச்சினையானது வேகம் பெற்றிருந்தது. இதன் பொருட்டு ஒரு தடவை ஆட்சியினையும் பறிகொடுத்தவர். இலங்கைத் தமிழருக்காகப் பல்வேறு போராட்டங்களிலும் வயது முதிர்ந்த நிலையிலும் ஈடுபட்டவர். முடிந்த உதவிகள் பலவற்றினை இலங்கையிலும் தமிழகத்திலும் வாழ்ந்த இலங்கைத் தமிழ் மக்களுக்குச் செய்தவர். இனப்பிரச்சினை தீர்விற்கான நடவடிக்கைகளில் இறங்கியவர். இருப்பினும் இலங்கையில் போர் உச்சக்கட்டத்தினை அடைந்திருந்த நேரத்தில் போரினைத் தடுப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனத்திற்கும் உள்ளானவர். வரலாற்று அணுகுமுறையினடிப்படையில் விமர்சன ஆய்வாக அமையப்பட்ட மேற்குறித்த ஆய்விற்குத் தேவையான தரவுகள் நேர்காணல்கள், அவதானிப்புக்கள், கலந்துரையாடல்கள், சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகள், நூல்கள், சஞ்சிகைகள், இணையம் என்பவற்றிலிருந்து முதற்தர மற்றும் இரண்டாம்நிலைத் தரவுகள் என்ற அடிப்படையில் பெறப்பட்டுள்ளன. கருணாநிதி இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் இதய சுத்தியுடன் அவரால் முன்னெடுக்கப்பட்டனவா என்பது ஆய்வின் பிரதான பிரச்சினைகளிலொன்றாகக் காணப்படுகின்றது. இவ்வாய்வின் ஊடாகப் பல்வேறு நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன. குறிப்பாக இலங்கையின் இனப்பிரச்சினையில் கருணாநிதி தலையிட்டமைக்கான பின்னணி, மேற்கொண்ட சாதக, பாதக நடவடிக்கைகள், பிற தமிழக முதல்வர்களுடன் ஒப்பிடுகின்றபோது மேற்குறித்த விடயமாக இவரது தனித்தன்மை போன்ற நோக்கங்கள் பார்க்கப்படுகின்றன. எது எவ்வாறாயினும் ஈழ அனுதாபிகள் என்பது ஒருபுறமிருக்க அதற்கும் அப்பால் அவர் ஒரு அரசியல்வாதியாகவே இலங்கைத் தமிழர் பிரச்சினை பொறுத்து அவரது ந்வடிக்கைகள் அமைந்திருந்தன என்பதனையும் மறுக்க முடியாது. en_US
dc.language.iso other en_US
dc.publisher South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka en_US
dc.subject ஈழத்து அகதிகள் en_US
dc.subject மத்திய அரசு en_US
dc.subject தமிழக மக்கள் en_US
dc.subject ஈழத்துப் போராட்டக் குழுக்கள் en_US
dc.subject கருணாநிதி en_US
dc.title இலங்கைத் தமிழர் பிரச்சினையும் கருணாநிதியும் : ஒரு வரலாற்றுப் பார்வை en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account