Abstract:
பாடசாலைகளிலுள்ள மாணவர்களின் கற்றற் செயற்பாட்டை வலுப்படுத்தவும்,
மாணவர்களைப் பாடசாலைகளிலேயே இனங்கண்டு வழிப்படுத்தவும், அவர்களின்
ஆற்றல் திறன்களுக்கேற்ற துறைகளை தெரிவு செய்து இலக்கை நோக்கிப்
பணயிக்கவும் வழிசெய்யக் கூடிய துறையாகப் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டதே
பாடசாலை வழிகாட்டலும் ஆலோசனையும் சேவையாகும். (School Based Guidance &
Counseling)
பாடசாலைகளில் வழிகாட்டலும் ஆலோசனையும் சேவையானது ஓர் முக்கிய
அம்சமாக அமைய வேண்டும் என்பதை கல்விப்புலம் சார்ந்த அனைவரும்
உணர்ந்துள்ளனர். ஏனெனில் மாணவர்கள் நாளாந்தம் பல்வேறு விதமான சாதரண,
அசாதாரணமான சிக்கல்களை எதிர் கொள்வதனால் அவர்களுடைய நாளாந்த கற்றற்
செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. அவ்வாறான சவால்கள் நிறைந்த சந்தர்ப்பங்களில்
பிரச்சினைகளுக்கு சரியாக முகங்கொடுப்பதற்கு சக்தியையும், தைரியத்தையும் வழங்கி
அவர்களைத் திருப்தி செய்கின்ற, வழிப்படுத்துகின்ற துறையாக பாடசாலைகளில்
வழிகாட்டலும் ஆலோசனையும் பிரிவு காணப்படுகின்றது. கற்றலின் போதும் வௌ;வேறு
வயது மாணவர்களுக்குக் கற்பித்தலின் போதும் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும்
சிக்கல்களையும் அணுகுவதற்கும் ஆசிரியர்கள், பெற்றோருக்கும் ஏற்படுகின்ற
சவால்களையும் நிவர்த்திக்கக் கூடிய வகையில் பாடசாலைகளையும் சமூகத்தையும்
இணைத்த வகையில் இச்சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாய்வானது பாடசாலைமட்ட வழிகாட்டலும் ஆலோசனைச் சேவையிலுள்ள
சவால்களை வெளிக் கொணர்வதுடன் அவற்றுக்கான பரிந்துரைகளையும் பற்றிப்
பேசுவதாக அமைகின்றது. இவ்வாய்வில் அளவைநிலை ஆய்வு மற்றும் பண்பு
நிலைஆய்வு பின்பற்றப்பட்டுள்ளது. இவ்வாய்வானது வடமாகாண வழிகாட்டலும்
ஆலோசனைச் சேவையிலுள்ள ஆசிரியர்களை மையப்படுத்தி பெறப்பட்ட முதலாம்
நிலைத் தரவுகளை மையப்படுத்திய விபரண ஆய்வாக உள்ளது. இவ்வாய்வானது
பாடசாலைகளில் வழிகாட்டலும் ஆலோசனைச் சேவையின் இன்றியமையாத
தன்மையையும் பாடசாலைகளில் அவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதாக
அமைகின்றது.