Abstract:
இவ்வாய்வு அனுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் திருமணத்தில் மணக்கொடை
தொடர்பான நடைமுறைகளை அடையாளப்படுத்தல், குறித்த பிரதேசவாசிகளிடம் அது
எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது எனும் இரண்டு பிரதான நோக்கங்களை
அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நோக்கங்களை அடைந்துக்
கொள்ளும் நோக்கில் சுமார் 130 வினாக்கொத்துகள் அனுராதபுர மாவட்டத்தில்
அமைந்துள்ள கெகிராவை மற்றும் பஹலகம பிரதேசங்களில் விநியோகம்
செய்யப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்தோடு இரண்டாம் நிலைத்தரவுகளும்
இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி தரவுகள் SPSS மென்பொருள் மூலம்
பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. பெறுபேறுகளின் படி,
மணக்கொடை பெண்களால் வேண்டப்படுவதோ அல்லது ஆண்களால் அதன் தொகை
பற்றி பெண்தரப்பாரிடம் வினவப்படுவதோ நடைமுறையில் இல்லை. எனினும் குறித்த
பிரதேச மக்களின் திருமணத்தில் மணக்கொடை முக்கியத்துவம் பெற்று
விளங்குவதோடு, மணப்பெண்ணுக்கு ஓர் ஆண் அதைக் கொடுப்பது கடமை என்கின்ற
உணர்வு காணப்படுகிறது. ஆய்வுப் பிரதேச மஹர் நடைமுறைளை இஸ்லாத்தின்
பார்வையில் பரிசீலனை செய்த போது குறித்த நடைமுறைகள் இஸ்லாமிய
போக்கிலிருந்து குறிப்பிடத்தக்களவு விலகியிருந்தமை ஆய்வில் அவதானிக்கப்பட்டது.