SEUIR Repository

மரக்கறி உற்பத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் பற்றிய பிற்செலவுப் பகுப்பாய்வு-மருதனார்மடம் சுன்னாகம் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு ஆய்வு

Show simple item record

dc.contributor.author Sivanathan, V. P.
dc.contributor.author Sakitha, P.
dc.date.accessioned 2019-11-26T05:18:30Z
dc.date.available 2019-11-26T05:18:30Z
dc.date.issued 2019-11-27
dc.identifier.citation 9th International Symposium 2019 on “Promoting Multidisciplinary Academic Research and Innovation”. 27th - 28th November 2019. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 74-83. en_US
dc.identifier.isbn 978-955-627-189-8 Tam
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3919
dc.description.abstract இலங்கையில் நெற்செய்கைக்கு அடுத்த நிலைமையில் உள்ளது மரக்கறிச் செய்கையாகும். இலங்கையில் நுகர்வோர் மேற்கொள்ளும் செலவில் அண்ணளவாக 6% வரை மரக்கறிகளின் நுகர்வுக்கே செலவு செய்கின்றனர். இலங்கை ஒர் விவசாய நாடு என்ற வகையில் விவசாயத்துறை சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகளை காலத்துக்கு காலம் மேற்கொள்கின்றது. பொருளாதார நடவடிக்கைகளினூடாக நோக்கி உற்பத்தி நடவடிக்கைகள் எதற்குமே உள்ளீடு;கள் என்பது மிக மிக அவசியமானதாகும். மரக்கறி உற்பத்தியினை பொறுத்து விளைநிலம், உரப்பாவனை, பீடைகொல்லிக்கான செலவு, ஊழியம், இயந்திரங்களின்செலவு, நிறுவன அமைப்பு ரீதியான உதவி, போன்ற பல காரணிகள் மரக்கறி உற்பத்தியில் செல்வாக்கு செலுத்துகின்றன. இவ்வாறான காரணிகள் மரக்கறி உற்பத்தியில் எவ்வகையான தாக்கத்தை செலுத்துகின்றது. என்பதனை அறியும் பொருட்டு “மரக்கறி உற்பத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் பற்றிய பிற்செலவுப் பகுப்பாய்வு-மருதனார்மடம், சுன்னாகம் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் நோக்கு” என்ற ஆய்வானது அமைந்துள்ளது. ஆய்விற்காக இரு பகுதிகளில் இருந்தும் 278 மரக்கறிச்செய்கையாளர்கள் மாதிரியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மரக்கறி உற்பத்தியானது சார்ந்த மாறியாகவும்இதாக்கம் செலுத்தும் காரணிகளை சாராமாறிகளாகவும் கொண்டு, பல்மாறி பிற்பலச்செலவு ஆய்வு முறையினூடாக முடிவுகள் பெறப்பட்டுள்ளன.(உரப்பாவனை, இஊழியத்துக்கான செலவு, பீடைகொல்லி, இயந்திரப் பாவனைக்கான செலவு, நிறுவன ரீதியான உதவி) உதாரணமாக உள்ளீடுகளின் தரத்தில் ஏற்படும் 1% அதிகரிப்பானது மரக்கறி உற்பத்தியினை 0.625kg ஆல் அதிகரிக்கச் செய்யும். எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து மாறிகளுமே மரக்கறி உற்பத்தியுடன் பொருண்மை தன்மையுடையதாக காணப்படுவதோடு அதனுடன் F பெறுமதியானதும். புள்ளிவிபர ரீதியாக பொருண்மைத்தன்மையுடையாதாக காணப்படுகின்றது. எனவே பல்மாறி பிற்செலவு ஆய்வு முறையில் முழுமொத்த மாதிரியும் புள்ளிவிபரரீதியாக பொருண்மைத் தன்மையுடையாதாகக் காணப்படுவதனால், ஆய்வின் முடிவுகளை ஏற்கக்கூடியதாகவள்ளது. en_US
dc.language.iso en_US en_US
dc.publisher South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. en_US
dc.subject Vegetable production en_US
dc.subject Access to credit en_US
dc.subject Fertilizer quantity en_US
dc.subject Cost of labour force en_US
dc.subject Cost of machenaries en_US
dc.subject விவசாயத்துறை en_US
dc.subject நுகர்வுச் செலவு en_US
dc.subject உள்ளீடுகள் en_US
dc.subject பொருளாதார நடவடிக்கைகள் en_US
dc.subject ஊழியச் செலவு en_US
dc.title மரக்கறி உற்பத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் பற்றிய பிற்செலவுப் பகுப்பாய்வு-மருதனார்மடம் சுன்னாகம் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு ஆய்வு en_US
dc.title.alternative A study of regression analysis of the factors influence on production of vegetable: special reference to Maruthanarmadam and Chunnakam en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account