Abstract:
ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ, ஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கைத் தேடும் இயலைப்
பற்றி விபரிப்பதே ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் (Chaos theory) மையமாகும் (சிவம், 2006).
தொடர்பற்ற நிகழ்வுகளிடையே தொடர்புகள் உள்ளன என்றும் ஒரு சிறிய நிகழ்வு கூட பாரிய
மாற்றங்களை கொண்டுவரும் ஆற்றல் மிக்கது என்றும் இக்கோட்பாடு கூறுகின்றது.
ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் கருத்துகளை இஸ்லாம் சூழலோடு சம்பந்தப்படுத்தி எவ்வாறு
நோக்குகின்றது என்பதனை விபரிப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். இஸ்லாமிய
மூலாதாரங்களையும், அறிஞர்களது நூற்களையும் இரண்டாந்தர தரவுகளாகப் பயன்படுத்தி
இவ்வாய்வு இஸ்லாத்தின் பார்வைகளை விபரிக்கின்றது. சூழலுக்கு உயிர்ப் பெறுமானம்
கொடுத்தல், மனிதனைப் போல் சூழலில் உள்ளவவையும் இறைவனை துதிப்பதாக நோக்கல்,
சூழலை இறைவனின் குடும்ப அங்கமாகப் பார்த்தல் என நோக்குவதன் வழி சூழலை
சகோதரத்துவக் கண்கொண்டு பார்க்கின்றது இஸ்லாம். மேலும் சிறிய செயலாக இருந்தாலும சூழலை அது வளப்படுத்துமானால் செய்யும் படியும் நலிவடையச் செய்யுமானால் தவிர்ந்து
கொள்ளும் படியும் இஸ்லாம் போதிக்கின்றது.