Abstract:
உலகில் மிக வேகமாக முன்னேறி வரும் துறைகளுள் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும். சுற்றுலாத் துறையின்
பங்களிப்பானது ஒரு நாட்டின் பொருளாதார விருத்தியில் இன்றியமையாததாக காணப்படுகின்றது. இன்று மக்கள்
எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட சவால்களில் சுற்றுலாத்துறையிலுள்ள வீழ்ச்சிகள் முக்கியமானவையாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி மாவட்டத்தில் குருநாகல் பண்டுவஸ்நுவர புராதன தளத்தில் வேலை
செய்யும் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு அரைக்கட்டமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்
ஒன்றின் மூலம் இவ்வாய்வுக்குரிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. இவ்வாய்வானது
முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளை மையமாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த
வகையில் இலங்கையின் வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டுவஸ்நுவர
பிரதேசமானது ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை சுற்றுலாப் பிரதேசமாகக் காணப்பட்டாலும் சுற்றுலாப்
பயணிகளின் வருகை குறைவாகவே காணப்படுகின்றது. இதற்குப் பிரதான காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு
போதிய விடுதி வசதிகள் இன்மை, அதனுள் போதிய பாதுகாப்பு இன்மை, உட்கட்டமைப்பு வசதிகளுள்
உணவகங்கள் மற்றும் மலசலகூடங்கள், பொருத்தமான பாதைகள் இன்மை போன்ற காரணங்களால்
பண்வஸ்நுவர புராதன தளங்களில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றன. மேலும் குருநாகல்
மாவட்டத்தின் பிரசித்தி பெற்றுக்காணப்படும் முக்கிய தளங்களுடன் ஒப்பிடுகையில் பண்டுவஸ்நுவர புராதன
தளமானது, வீழ்ச்சியடைந்து சென்றதை இவ் ஆய்வின் மூலம் கண்டறியக் கிடைத்தது. மேலும் இவ்வாய்வானது
பண்டுவஸ்நுவர பிரதேச சுற்றுலாத் துறையிலுள்ள வீழ்ச்சிகளைக் கண்டறிவதே இதன் நோக்கமாகக்
காணப்படுகின்றது. எனவே, எதிர்காலத்திலுதம் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள்
இருப்பதனால் அதனை கருத்திற் கொண்டு இத்தகைய சுற்றுலாத்துறை குறைபாடுகளை தடுப்பதற்கான தீர்வுகள்
முன்மொழியப்பட்டுள்ளன.