Abstract:
மரமுந்திரிகை உற்பத்தியானது குறைந்த உற்பத்தி செலவிலும், குறைந்தளவான பராமரிப்பு செய்வதன்
மூலமாகவும் அதிக இலாபத்தை பெறக்கூடியதொரு உற்பத்தியாகும். இவ்வாய்வு மட்டக்களப்பு மாவட்ட
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் மரமுந்திரிகை உற்பத்தியை தீர்மானிக்கும் காரணிகளை
கண்டறிவதனை நோக்கமாக கொண்டமைந்துள்ளது. 100 மரமுந்திரிகை உற்பத்தியாளர்களிடம் மாதிரி எடுப்பு
முறையில் வினாக்கொத்துக்கள் மூலம் பெறப்பட்ட தரவுகள் Microsoft Exel, STATA கணினி மென் பொருளை
பயன்படுத்தி பல்மாறி பிற்செலவு அணுகுமுறையினூடாக செய்யப்பட்டுள்ளன. ஆய்வில் சார்ந்த மாறியாக
மரமுந்திரிகை உற்பத்தியளவும், சாரா மாறிகளாக நிலத்தின் அளவு, பால், வருமானம், கல்வி, காலநிலை,
அனுபவம், விரிவாக்கல் நடவடிக்கை, நோய், பீடைத் தாக்கம், உர பாவனை போன்ற மாறிகளும்
ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகளின் படி நில அளவு, வருமானம் என்பன நேர்கணிய
தாக்கத்தினையும் கல்வி, காலநிலை, நோய், பீடைத் தாக்கம் என்பன எதிர்கணிய தாக்கத்தினை
ஏற்படுத்துவதாகவும் காணப்படுகின்றது. அனுபவம், விரிவாக்கல் நடவடிக்கை என்பன பொருண்மைத் தன்மை
அற்றதாகவே காணப்படுகின்றது என்பது ஆய்வின் முடிவுகளாக பெறப்பட்டுள்ளது. மரமுந்திரிகை உற்பத்தியில்
செல்வாக்குச் செலுத்தும் காரணிகளின் துணிவுக் குணகம் (R2) 0.8393 ஆகும். சாரா மாறிகள் சார்ந்த மாறியான
மரமுந்திரிகை உற்பத்தியளவில் 0.8393 % செல்வாக்கு செலுத்துகின்றது. என்பதனைக் காட்டுகின்றது.