Abstract:
நீர் என்பது ஒவ்வொரு உயிரிகளுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக காணப்படுகிறது. பருவகால
மாறற்றத்திற்கு ஏற்ப நீரின் கிடைப்பனவும் மாறுபடுகிறது. இலங்கையை பொறுத்த வரையில் நான்கு
வழிமுறைகளில் மழைவீழ்ச்சியை பெற்றுக் கொள்கிறது. இவ்வாறு கிடைக்கும் மழைவீழ்ச்சியை
நீர்த்தேக்கங்கள் குளங்கள் போன்றவற்றில் சேமித்து மழைவீழ்ச்சி குறைவான காலங்களில் அவற்றை
விவசாயம் உட்பட ஏனைய பல தேவைகளுக்காக பயன்படுத்தும் நுட்பம் இலங்கையில் கி;.மு. 300 ஆம்
ஆண்டுகளிலிருந்தே தோற்றம் பெற்றிருந்தது. நீரேந்து பிரதேசங்கள் என்பது நீரைக் காவிச் சென்று
தக்கவைத்துக் கொள்ளும் பகுதிகளாகும். நீர்ப்பாசனத்தை விருத்தி செய்வதற்காக காலத்திற்கு காலம்
பல்;வேறு நீர்ப்பாசன திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவை அண்மைக்காலமாக பல்வேறு
பௌதீக மானிட காரணிகளால் சீரழிவுக்கு உட்பட்டு காணப்படுகின்றன. நீரேந்து பிரதேசங்களின் இத்தகைய
சீரழிவுகளானது அப்பிரதேச நீரை சேமிப்பதில் பல்வேறு சவால்களை எதிர் கொண்டுள்ளது. கல்லோயா
நீரேந்து பிரதேசமானது பல் நோக்;கு அபிவிருத்தி இலக்கினை கொண்ட ஓர் திட்டமாகும். 1948 ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட முதலாவது பாரிய திட்டமாகும.;
இத்திட்டமானது முழுமையாக பூர்த்தியடைந்த பின் விவசாயிகள், பொதுமக்களுக்கு நன்மையளிக்க கூடியதாக
இருப்பினும் அண்மைக்காலமாக பருவகால மாற்றங்கள் உட்பட பல்வேறுபட்ட காரணிகளால் பல
சவால்களை எதிர் கொண்டுள்ளது. “கல்லோயா நீரேந்து பிரதேசத்த்pன் நீர் வளத்தை சேமிப்பதில்; உள்ள
சவால்கள்” எனும் தலைப்பில் அமையப் பெற்றுள்ளது.இவ்வாய்விற்கான முதலாம் நிலைத்தரவு சேகரிப்பு
முறைகளாக நேர்காணல்களும், நேரடி அவதானம் போன்றனவும், இரண்டாம் நிலைத்தரவு சேகரிப்பு
முறைகளாக அறிக்கைகள், ஆய்வு கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் போன்றனவற்றின்
மூலமாகவும் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. மேலும் இவ்வாய்விற்கு MS Word, Excel, Arc GIS போன்ற கணினி
மென் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் பெரும்பாலான தரவுகள் வரைபடங்களாகவும்
அட்டவணைகளாகவும் ஒழுங்குபடுத்தபட்டுள்ளன. முடிவாக விதந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன்
முறையான நீரேந்து பிரதேச முகாமைத் திட்டமிடலை மேற்கொள்வதனூடாக சமகாலத்தில்
ஆய்வுப்பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை காண முடியும்.