dc.description.abstract |
இருபத்தியோராம் நூற்றாண்டிலே வல்லரசுகள் மற்றும் பிராந்திய அரசுகளின் அரசியல் மற்றும்
பொருளாதார ஆதிக்கப் போட்டிக்கு உரிய களமாக அமையப்பெற்ற பிராந்தியங்களாக மத்திய
கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகள் காணப்படுகின்றன. இஸ்லாமிய நாகரிகத்திற்கு எதிரான
மேற்குலகின் போர் வியூகம் நீண்ட வரலாற்றினைக் கொண்டது. சிலுவை யுத்தம் என்ற பெரும்
மனித அழிவினை ஏற்படுத்திய போரானது இஸ்லாமிய கிறிஸ்தவ நாகரிக மோதலாகவே
அளவிடப்படுகின்றது. இதன் ஆரம்பம் முதல் இன்றைய சூழல் வரை ஏதோ ஒரு வகையில்
இஸ்லாமிய நாடுகளின் அடிப்படைகளை மேற்குலகம் சுரண்டி வருகின்றது. துருக்கிய ஒட்டமன்
இராட்சியத்தின் வீழ்ச்சியூடன் மேற்குலகத்தின் எழுச்சி இஸ்லாமிய நாடுகளையும் அதன்
நாகரிகத்தினையும் பகுதிகளாக துண்டுபோட முயல்கின்றது. அதில் முதலாம், இரண்டாம் உலக
யுத்தங்களும், பனிப்போரும் மேற்குலகிற்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுத்திருந்தன.
பனிப்போரின் பின்பான புதிய உலக ஒழுங்கின் கீழ் இஸ்லாமிய நாடுகளையும், நாகரிகத்தினையும்
முதல் எதிரியாக மேற்குலகம் கருதியது. இந்த ஆய்வானது இஸ்லாத்திற்கு எதிரான உலக
அணிதிரட்டலை அடையாளப் படுத்துவதுடன் இதிலிருந்து மீள்வதற்கான உபாயங்களை கண்டறிய
முனைகின்றது. ஒரு பலமான, இறுக்கமான நிறுவனக் கட்டமைப்புக்களை உள்வாங்காத எதிர்
முரணியத்துடன், விரிபாக்கத்தினையும், நிலைத்திருப்பினையும் கொண்டிருக்கின்ற நாகரிகமாக,
இனமாக, பண்பாடாக இஸ்லாம் விளங்குகின்றது. வல்லரசுகள் தமக்குத் தேவையான மூலப்
பொருட்களில் ஒன்றான எண்ணெய் வளத்தினை சுரண்டிப் பெற்றுக் கொள்வதற்கும் அதற்கான
கடல்வழிப் பயணத்தினகட்டுப்பாட்டை தமக்கு கீழ் கொண்டு வரவும் இப்பிராந்தியங்கள் மீது
செல்வாக்குச் செலுத்துகின்றன. இப்பிராந்தியங்களில் தமக்குச் சார்பான ஆட்சியினை
ஏற்படுத்துவதிலும் அதனை தக்கவைத்துக் கொள்வதிலும் பல தலையீடுகளையும் போக்குகளையும்
அப்பிராந்தியங்கள் மீது திணிக்கின்றன. அந்த வகையில் மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய
நாடுகளின் மீது திணிக்கப்பட்ட ஒன்றாகவே அரபு வசந்தம் என்பதும் காணப்படுகின்றது. இங்கு
மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப சில இஸ்லாமிய நாடுகள் செயற்படுகின்றமை
என்பது ஆய்வுப் பிரச்சினையாக உள்ளது. உலகிற்கு நியாயத்தினையும், மனித
உரிமைகளையும், ஜனநாயகத்தினையும் போதிக்கும் மேற்குலகம் இஸ்லாத்திற்கு எதிரான
வன்முறையினை கட்டவிழ்த்து விடுவது எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற
வினாவும் எழுகின்றது. மேலும் இந்து. பௌத்தம். சீன நாகரிகங்களை தன்னுடன்
கூட்டுச்சேர்த்துள்ள மேற்குலகம் தனது எதிரியான இஸ்லாத்தினை தோற்கடிக்க முயல்வதும்,
ஏனைய நாடுகளுக்கும் நாகரிகங்களுக்கும் எதிராக இஸ்லாத்தினை தூண்டி விடுவதும்
பிரச்சினைக்குரியதே. இவ் ஆய்வானது புத்தகங்கள். சஞ்சிகைகள், இலக்கியங்கள். முன்னர்
மேற்கொள்ளப்ட்ட ஆய்வுகள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளை பயன்படுத்தியயுள்ளது.
இறுதியாக இதிலிருந்து விடுபடுவதற்கு இஸ்லாமிய நாடுகள் பின்பற்ற வேண்டிய உபாயங்கள்
கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. |
en_US |