Abstract:
இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டமரபு காழி நீதி மன்றத்தை தோற்றுவித்தது. இதற்கமைய
நிறுவப்பட்ட ஆரம்ப கால நீதிமன்றங்களில் ஒன்றான சம்மாந்துறை காழி நீதிமன்றத்தின்
முகாமைத்துவம், ஒழுங்கமைப்பு என்பனவற்றைப் பரிசீலிப்பதனை இவ்வாய்வுக் கட்டுரை நோக்காக்
கொண்டுள்ளது. நேர்காணல் அவதானம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு
இந்நீதிமன்றத்தின் ஆவணங்களின் மீளாய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இவ் ஆய்வு
பண்பு ரீதியானதாகும். முஸ்லிம் பாரம்பரிய கிராமம் ஒன்றின் இஸ்லாமிய நீதிப் பரிபாலனத்திற்கான
ஒழுங்கு முறைகளையும், முகாமைத்துவத்தையும், அடிப்படையான வளங்களையும் சம்மாந்துறை
காழி நீதிமன்றம் கொண்டமைந்து தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆயினும் அதன்
செயற்திறனை மேம்படுத்துவதற்கான சீராக்கமும் புத்தாக்கமும் தேவைப்படுகின்றது. அதற்கான
விதந்துரைகளுக்கு வழிகாட்டியாக இவ் ஆய்வு அமைந்துவிடவல்லது.