dc.description.abstract |
மனிதனின் முதல் சமூக நிறுவனம் குடும்பம் என்ற வகையில் தனிமனிதன், குடும்பம் என்பதை
திருமணத்தினூடாக ஏற்படுத்திக்கொள்கின்றான். திருமணம் எனும் அம்சம் ஆண்-பெண் எனும் இரு
வேறுபட்ட தரப்பினா்களை ஒரு சமூகத்தின் முதன்மை அத்திவாரமாகிய குடும்பம் என்ற
கட்டமைப்பினுள் ஒன்றிணைக்கின்றது. அரிதான சந்தர்ப்பங்களில் கணவன் மனைவிக்கிடையில்
பிணக்குகள் எற்பட்டு மன முறிவுக்கு உள்ளாகி விவாகரத்துக் கோரும் நிலைமைகளும்
ஏற்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் விவாகரத்துப் பெற்ற ஆண்களை விட அதிமான
பெண்கள் அதன் பாதிப்புக்களை அனுபவிக்கின்றனர். இந்த வகையில் இப்பிரச்சினைகள் தொடர்பான
ஆய்வுகள் அவசியமாகின்றது. அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் விவாகரத்துப் பெறுவதற்கான
காரணங்களையும், முஸ்லிம் பெண்கள் விவாகரத்துக் கோருவதனால் எவ்வாறான பாதிப்புக்கள்
ஏற்படுகின்றன என்பவற்றையும் கண்டறிவது இவ்வாய்வின் பிரதான நோக்கங்களாக உள்ளன. பண்பு
ரீதியான தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இவ்வாய்வூஇ குறித்த ஆய்வுப் பிரதேசத்தில்
விவாகரத்துப் பெற்றவா்களுள் எழுமாறாக 50 பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு அவா்களிடம் பெறப்பட்ட
நேர்காணலின் பகுப்பாய்வினையும் மேலும் ஆவணங்களின் மீளாய்வினையும் மையப்படுத்தி
மேற்காணும் நோக்கங்கள் அடையப்பட்டுள்ளன. பெண் விவாகரத்தின் அதிகரிப்புக்கு கணவன்,
மனைவி மத்தியில் எழும் சந்தேக மனப்பாங்கு மற்றும் பராமரிப்பின்மை முக்கிய காரணிகளாக
அமைந்துள்ளன. விவாகரத்துப் பெற்ற பெண்கள் தாபரிப்புப் பணத்தை உரிய நேரத்தில்
பெற்றுக்கொள்ளாமை, தனிநபா், நடத்தையில் குளறுபடிகள் ஏற்படல், சுயகொளரவம் இழக்கப்படல்,
பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படல், பாதுகாப்பு இழக்கப்படல், மன உளைச்சலுக்கு
ஆளாகுதல், கலாசார, சமூக சீர்கேடுகள், தனிமனித பாதிப்புக்கள் மற்றும் அநாதரவாக்கப்படல்
ஆகிய பாதிப்புக்களுக்கு மேற்படி விவாகரத்துப் பெற்ற பெண்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.
மேற்படி ஆய்வில் விவாகரத்துப்பெற்ற அதிகமான பெண்கள் தாபரிப்புப் பணம் உரிய நேரத்தில்
கிடைக்காததால் கூடுதலான பாதிப்புகளை அனுபவிப்பதாக கண்டறியப்பட்டது. ஆகவே, இவ்வாய்வின்
முடிவுகள் கொள்கை வகுப்பாளா்கள், சமூக ஆய்வாளர்கள், சமூக அமைப்புக்கள், குடும்ப
ஆலோசனை வழிகாட்டல் அலுவலா்கள் போன்றௌருக்கு தீா்மாணங்களை மேற்கொள்ளத்
துணையாக அமைய முடியும். |
en_US |