Abstract:
ஆன்மீகத்திலும் அரசியலிலும் ஒன்று சேறும் போதுதான் கோட்பாடு ரீதியாகவும், நடைமுறை
ரீதியாகவும் எந்த ஒரு கொள்கையும் உச்சத்தை தொட்டு நிலை பெறுகிறது. இன்று உலகில்
தோன்றி மறைந்த அனைத்து கொள்கைகளும் இந்த இரண்டையும் ஒரு சேர
கண்டுகொள்ளாமையே அவைகளது வீழ்ச்சிக்கு காரணமாயின. ஆனால் எவ்வளவுதான் வரலாற்று
மனிதர்கள் தோன்றி மறைந்தாலும் இஸ்லாமிய அரசின் தலைவர், அண்ணலாரின் இடத்தை
எவராலும் எட்ட இயலாமல் போனதற்கான ஒரே காரணி சந்திக்க சாத்தியமில்லை என்று கருதிய
இரு துருவங்களான ஆன்மீகம் மற்றும் அரசியல் என இரண்டையும் ஒன்றினைத்து
வெற்றிகண்டமையாகும். அரசியலுக்கு நடைமுறை விளக்கம் கொடுத்த மார்க்கம் இஸ்லாமே
என்பது வாதத்திற்கு இடம் தராத ஒரு வரலாற்று உண்மை. எனவே நாம் இந்த ஆய்வில் எமக்கான
தனியான தனித்துவமான ஓர் அரசியல் ஒழுங்கு உள்ளது என்பதை தெரிந்த நிலையில் இன்று
பலராலும் பேசப்பட்டு வருகின்ற நல்லாட்சி எண்ணக்கரு இஸ்லாமிய அரசியல் கோட்பாட்டுக்கு
எவ்வகையில் உடன்படுகின்றது, முறண்படுகின்றது. என்ற பிரச்சினையை மையமாகக் கொண்டே
இவ்வாய்வு அமைந்துள்ளது. இந்த ஆய்வில் இரண்டாம் நிலை தரவுகளை முதன்மையாக்
கொண்டே ஆய்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது பண்பு சார் பகுப்பாய்வு முறையில் ஒழுங்கு
படுத்தப்பட்ட ஆய்வு முறையியலாகும். நல்லாட்சி எண்ணக்கருவின் பண்புகளான பங்குபற்றுதல்,
வெளிப்படைத்தன்மைஇ சட்டவாட்சிஇ பொறுப்புக் கூறல், சமத்துவமும் உள்வாங்களும்,
கணக்குகாட்டல், வினைதிறனும் விளைதிறனும், கருத்தொருமித்தலும் இஸ்லாமிய அரசியல்
கோட்பாட்டிலிருந்து தோற்றம் பெற்றவை என்பது இவ்வாய்வின் கண்டறிதலாகும். எனவே எந்த ஒரு
கோட்பாட்டையும் இஸ்லாமிய அடிப்படையில் இருந்து நோக்குகின்ற பார்வை வரவேண்டிய தேவை
முன்மொழியப்பட்டது.