dc.description.abstract |
மானிட வாழ்விற்குரிய நல்லறங்களைப் போதிப்பதில் இலக்கியங்களும், மதங்களும் பிரதான
இடத்தை வகிக்கின்றன. உலகப் பொதுமறையாய் விளங்கும் திருக்குறளும் முஸ்லிம்களினால்
பின்பற்றப்படும் இஸ்லாமிய மார்க்கமும் இவற்றுள் உள்ளடங்குகின்றன. திருக்குறளின்
அறத்துப்பாலில் உள்ளடங்கியுள்ள இல்லறவியல் பகுதியில் கூறப்பட்ட நல்லறங்களை
இஸ்லாத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதை இவ் ஆய்வு நோக்காகக் கொண்டுள்ளது. திருக்குறளின்
இல்லறவியல் பகுதி இல்வாழ்க்கை, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி
அறிதல் என்பவை உள்ளடங்கலாக இருபது அதிகாரங்களில் அன்றாட மனித வாழ்விற்குரிய
நீதிக்கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இஸ்லாமிய
நோக்கு நிலையில் இறைவேதமாகிய குர்ஆனும், இறைத்தூதரின் வாழ்வியல் வடிவமாகிய
ஹதிஸஷும் எவ்வாறு வலியுறுத்துகின்றன என்பதனை அறிய விபரணப்பகுப்பாய்வு முறை, ஒப்பியல்
முறை ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலக்கியமான திருக்குறளும், மார்க்கமாகிய இஸ்லாமும் இல்வாழ்விற்குரிய நல்லறங்களைப்
போதிப்பதுடன் உலக சமாதானத்திற்கும் வழிவகை செய்கின்றது. முதலாம் நிலைத் தரவுகளான
திருக்குறள், அல்குர்ஆன், ஹதீஸ் நூல்கள் போன்றவற்றுடன் இரண்டாம் நிலைத்தரவுகளான
நூல்கள், சஞ்சிகைகள், இணையம் போன்றவையும் இவ்வாய்வின் மூலங்களாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளன. |
en_US |