Abstract:
இஸ்லாம் ஓர் இறையியல் மார்க்கமாகும். எனவே அது தன்னகத்தே பல்வேறுபட்ட தனிச்
சிறப்புப் பண்புகளை கொண்டுள்ளது. அதில் மிக முக்கியமானதோர் பண்பு தான்
இம்மார்க்கம் எல்லா காலத்திற்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்தி செல்கின்ற
தன்மையை கொண்டது. இச்சிறப்புப் பண்பு இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகள் தொடக்கம்
சட்டவாக்கம்இ சிவில் வாழ்க்கை முறைமைகள், கொடுக்கல் வாங்கல் என எல்லா
பகுதிகளிலும் பிரதிபலிக்கிறது. அந்த வகையில் இஸ்லாமிய சட்டவாக்கத்தின் முக்கிய
பொறிமுறை இஜ்திஹாத் எனும் அமைப்பு இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும் எல்லா
இடத்திற்கும் பொருத்தமானது என்பதனை மேலும் உறுதிப்படுத்துவதுடன், இஸ்லாத்தின்
நிலைபேரான தன்மையையும் உறுதிசெய்கிறது. மேலும் இஜ்திஹாத் அக்தரி, சுகூதி என
பல்வேறு முறைமைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்
முறைகளில் நவீன முறைமைதான் கூட்டு இஜ்திஹாத் எனும் அமைப்பாகும். இம்முறைமை
ஏனைய முறைமைகளை விட நம்பகத் தன்மை கொண்டதாகவும், பிழைகளை விட்டும்
பாதுகாப்பான அமைப்பாக இருப்பதுடன், தற்காலத்தில் எழும் சட்ட பிரச்சினைகளுக்கான
இஸ்லாமிய தீர்வுகளை முன் வைப்பதிலும் இஸ்லாத்தை நவீனமான முறையில்
முன்வைப்பதிலும் முக்கிய இடம் வகிக்கிறது.