Abstract:
இஸ்லாம் செல்வ சுழற்சியின் ஓர் அங்கமாக நிர்ணயித்திருக்கும் மகத்தானதொரு
பொருளாதாரத்திட்டமே வாரிசுச் சொத்துப்பங்கீடு ஆகும். இலங்கை முஸ்லிம்களிடையே
வாரிசுச்சொத்து காலம் தொட்டு பகிர்ந்தளிக்கப்பட்டு வரும் விதத்தினை அறிதலும் அவை
அனைத்துமே இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்டு இடம்பெறுகிறதா என கண்டறிதலும் வாரிசுச்
சொத்தை இஸ்லாமிய நியமங்களின் பிரகாரம் பகிர்ந்தளிப்பதன் அவசியத்தை வலிறுயுறுத்துதலும்
அதற்காக சில ஆலோசனைகளை முன்வைத்தலும் இவ்வாய்வின நோக்கங்களாகும். இலங்கை
முஸ்லிம்களைப் பொருத்தவரையில் ஆய்வுப்பிரதேச முஸ்லிம்களிடையே சொத்துப்பகிர்வின்போது
பெண்கள் முன்னிலைப்படுத்தப்படுவதுடன் ஆண்கள் சொத்து பெறுவதில் சிக்கல்களை
எதிர்நோக்குகின்றனர். இப்பிரச்சனையானது கல்முனைப்பிரதேசத்தில் மட்டுமன்றி இன்னும் பல
பகுதிகளிலும் இடம் பெறுகின்றது. இந்நடைமுறையானது பல்வேறு விளைவுகளுக்கு இட்டுச்
செல்கின்றது. எனவே ஆய்வுப்பிரதேச சொத்துப்பங்கீட்டு முறை விபரிக்கப்பட்டு அவற்றை
இஸ்லாத்துடன் ஒப்பீடு செய்து இஸ்லாமிய வழிமுறையில் சொத்துப்பங்கீட்டை
அமைத்துக்கொள்வதற்கான சில முன் மொழிவுகளும் ஆய்வில் இடம் பெறுகின்றது. இதற்காக
முதல் நிலைத்தரவுகளாக வினாக்கொத்து, நேர்காணல், விடய ஆய்வு என்பனவும் இரண்டாம்
நிலை தரவுகளாக நூல்கள், சஞ்கிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.