Abstract:
பண்டைக்கால சமுதாயப் பழக்கவழக்கங்களிலே விருந்தோம்பல் மிகவுயர்ந்த அறமாகத் திகழ்ந்தது.
விரும்பி ஒருவர்க்கு ஈயும் முறைகளை இஸ்லாம் மற்றும் இந்து மதங்கள் தௌிவாக
எடுத்துரைக்கின்றன. அவை முறையே ஸகாத் மற்றும் விருந்தோம்பல் என்பனவாகும். சுட்டப்படும்
பெயா்கள் வேறுபாடுடையனவாகக் காணப்படுகின்ற போதிலும் மனிதனின் தேடும் உள்ளத்தால்
வாடும் மனமறிந்து மாற்ற நினைப்பதும் உதவுவதும் இவ்விரு கோட்பாடுகளினதும் முக்கிய
அம்சங்களாக அமைந்துள்ளன. ஸகாத் என்பது ஒருவரது செல்வத்தில் பிறருக்கென அல்லாஹ்
விதியாக்கிய ஒரு குறித்த விகித அளவென இஸ்லாம் கூறுகின்றது. அல்குர்ஆனில்
குறிப்பிடப்பட்டுள்ள பிரிவினருக்கு அது பகிர்ந்தளிக்கப்படும். செல்வத்திலிருந்து இவ்வாறு
வேறாக்கப்படும் பகுதி அல்லது அளவு ஸகாத் என கூறப்படுவதற்குக் காரணம் அது செல்வத்தை
அதிகரிக்கச் செய்வதோடு அதற்குாிய செல்வந்தனின் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகின்றது.
இதுபோல் இந்து சமயத்தின் முக்கிய பண்பாடான விருந்தோம்பல் ஒருவர்க்கு உணவளித்தல் எனும்
முறையில் உற்றுநோக்கப்படுகின்றது. அதன் உள்ளார்ந்த வெளிப்பாடுகளை ஆராயுமிடத்து
இஸ்லாத்தின் ஸகாத்துடன் ஒன்றிணைந்த போக்கினையே கொண்டமைகிறது. பொதுவான
விருந்தோம்பல் நடைமுறைகளிலிருந்து விலகி பெரும் கோட்பாடாக இயங்கிக் கொண்டிருக்கும்
இஸ்லாமியா்களின் ஸகாத் முறை இந்துக்களின் விருந்தோம்பல் நியமங்களை ஒத்ததாக
அமைகின்றனவா? என்பதும் இவ்விரு நடைமுறைகளினதும் அடிப்படை நோக்கங்கள் ஒரே
தன்மைகளைக் கொண்டனவா? என்பதும் ஆய்வுப் பிரச்சினைகளாக அமைந்தன. இவ்விரு
நடைமுறைகளின் உள்ளாந்த ஒத்த தன்மைகள் மற்றும் இவற்றின் ஒரே தன்மையான நோக்கங்கள்
இதுவரை ஆராயப்படவில்லை எனும் ஆய்வு இடைவெளியை அடிப்படையாகக் கொண்டு
இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இந்துக்களின் விருந்தோம்பற் சிந்தனைகளை அடையாளங்
காண்பதோடு ஸகாத் கோட்பாட்டின் அடிப்படைகளை இனங்காணல் மற்றும் இவ்விரு
கோட்பாடுகளிலும் உள்ள ஒத்த இயல்புகளை மதிப்பிட்டு அவை சமூக விழுமியங்களில் பெறும்
முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தல் என்பன ஆய்வின் நோக்கங்களாகும். இவ்வாய்வில் ஒப்பீட்டு
விபரண ஆய்வு முறை, வரலாற்று ஆய்வு முறை, பகுப்பாய்வு முறை என்பன
பயன்படுத்தப்படவுள்ளன. இரங்கும் மனம், பகிர்ந்தளிக்கும் பாசம், தொண்டு செய்யும் குணம்
என்பவற்றை இவ்விரு மதங்களும் ஸகாத் மற்றும் விருந்தோம்பல் என்பவற்றின் வாயிலாக மக்கள்
மனதிலே ஆழமாக பதியச் செய்கின்றன.