Abstract:
இஸ்லாமானது ஆடைக்கலாச்சாரத்தில் உடலியல் நிலைமைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான
ஆடைமுறைகளை வழங்கிய ஒரு பூரணத்துவமான மார்க்கமாகும். பெண்களின் ஆடை
விடயத்தில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது. அந்தவகையில் இவ்வாய்வானது, ஆய்வுப்
பிரதேசத்தில் பெண்களின் தற்பொழுது காணப்படுகின்ற ஆடைக்கலாச்சாரத்தினைக்
கண்டறிந்து, அதனை இஸ்லாமிய மயப்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைப்பதை
நோக்காகக் கொண்டுள்ளது. இஸ்லாமிய ஆடைசார் வரையறைகளும் ஆய்வுப்
பிரதேசத்தில் காணப்படுகின்ற பெண்களின் ஆடைக்கலாச்சாரமும் குறிப்பிடத்தக்களவு
ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகின்ற நிலைமையிலே காணப்படுகின்றது. எனினும் அந்நிய
கலாச்சாரத் தாக்கம், ஆடைநாகரீக மோகம் என்பவற்றின் காரணத்தினால் ஆடைகள்
இஸ்லாமிய வரையறையினின்றும் சற்று எல்லை மீறுவதனைக் காணலாம்.
இந்நிலைமையானது இஸ்லாத்தை பின்பற்றி ஒழுகும் மக்கள் வாழும் இப்பிரதேசத்தில்
மக்களிடையே கருத்து வேறுபாடுகளும் பிழையான கண்ணோட்டங்களும்
ஒருவரையொருவர் சாடுவதும் முதலிய அசௌகரீக நிலைகள் சமூக அரங்கில் ஒரு
பிரச்சினையை தோற்றுவிக்கின்றன. எனவே, இவ்வாய்வினைப் பூர்த்தி செய்வதற்காக
முதலாம், இரண்டாம் நிலைத்தரவூகள் பயன்படுத்தப்பட்டன. முதலாம் நிலைத்தரவுகளைப்
பெற்றுக்கொள்வதற்காக 100 கட்டமைக்கப்படாத நேர்காணல்களும் நேரடி அவதானிப்பு
முறையும் 02 இலக்குக்குழு கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம்
நிலைத்தரவுகளாக இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன், ஹதீஸ் மற்றும்
இஸ்லாமிய நுhல்கள், சஞ்சிகைகள், இணையக் கட்டுரைகள், ஏற்கனவே
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் முதலியன பயன்படுத்தப்பட்டன. இவ்வாறாக இவ்வாய்வானது
ஆய்வுப்பிரதேசப் பெண்களின் தற்போதைய ஆடைக்கலாச்சாரத்தை நான்கு
பிரிவுகளுக்குட்படுத்தி ஆய்வு செய்வதோடு அதன் பெரும்பாலானவை
இஸ்லாமியமயமாக்கத்தின் பால் தேவையுடையவனவாக இனங்காணப்பட்டுள்ளன.
அதேவேளை இப்பிரதேசப் பெண்களின் ஆடைக்கலாச்சாரத்தை இஸ்லாமிய
மயப்படுத்துவதற்காகஇ சிறுவயதிலிருந்தே இஸ்லாமியச் சூழலில் பெண்பிள்ளைகளை
வளர்த்தல், பெண்களுக்கு தங்களது ஆடை பற்றிய இஸ்லாமிய வரையறைகளை
தௌpவூபடுத்தல், முஸ்லிம் மகளிர்க்கு பொருத்தமான தளர்வான ஆடைகளை வடிவமைத்து
சந்தைப்படுத்தக்கூடிய தொழில் முனைவர்களை உருவாக்கல் போன்றன பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.