Abstract:
குழந்தையை தத்தெடுத்து வளர்த்தல் என்பது, குழந்தைப்பேறின்மை போன்ற
காரணங்களுக்காக வேறொரு பெற்றோருக்குப் பிறந்த குழந்தையை தனது குழந்தையாகக்
கருதி, தனது சொந்தக் குழந்தையாக வளர்ப்பதனை,பொதுவாகக் குறித்து நிற்கின்றது.
தத்தெடுத்து வளர்த்தல் என்ற இந்த நடைமுறை வரலாற்றில் எப்போது, எங்கு தோற்றம்
பெற்றது என்பதற்கான தௌிவான சான்றுகள் இல்லாதபோதும், இந்த நடைமுறை பரவலாக
எல்லா சமூகங்களிலும் போல பல்வேறு வடிவங்களில் அன்று தொட்டு நிலவி வருவதனைக்
காணலாம். இஸ்லாம் அரேபிய மண்ணில் உதிக்கின்ற காலத்திலும் கூட, அந்த
ஜாஹிலிய்ய சமூக சூழலிலும் ‘குழந்தைகளைத் தத்தெடுத்தல்’ என்ற சம்பிரதாயம்
புரையோடிப்போயிருந்தது. இறைதூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூட ஸைத் பின்
ஹாரிஸாவை தத்தெடுத்து வளர்த்தமை இதற்கான தௌிவான எடுத்துக்காட்டு. இஸ்லாமிய
ஷரீஆ இந்த நடைமுறையை ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவந்தது. இதிலுள்ள சாதக
பாதகங்களை சரியாக அடையாளம் கண்டு, சாதகமான அம்சங்களைப் பேணியும்,
பாதகமான அம்சங்களைக் கலைந்தும் இ நடைமுறை சாத்தியமான ஒரு கட்டமைப்பை
இஸ்லாம் இதற்கு வழங்கியுள்ளது. அதேபோன்று பிழையான வழக்காறுகளைக் கொண்ட
தத்தெடுத்தல் முறைமைக்கு பதிலீடாக பல மாற்றீடுகளை இஸ்லாம் அடையாளம்
காட்டியுள்ளது.இன்றைய சமூக அரங்கில் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முறண்பட்ட பிழையான
வழக்காறுகளைக் கொண்ட ‘குழந்தையைத் தத்தெடுத்தல்’ முறைமை பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இது பற்றிய இஸ்லாமிய ஷரீஆவின்
நிலைப்பாட்டை தௌிவுபடுத்தி, குழந்தைப் பேறு இல்லாதவர்கள் மற்றும் உபரியாக
பிள்ளைகளை வளர்க்க விரும்புவோருக்கு இஸ்லாம் முன்வைக்கும் மாற்றீடுகள் குறித்து
இங்கு ஆராயப்படுகிறது.