Abstract:
மனிதனானவன் பாரிய இலக்கை சுமந்தவனாகவே இவ்வூலகுக்கு அனுப்பப்பட்டுள்ளான்.
அல்லாஹுத்தஆலாவினால் காலத்துக்குக் காலம் அனுப்பப்பட்ட ரஸுல்மார்கள், நபிமார்களினூடாக
வேதங்களும் அருளப்பட்டன. அவை முஸ்லிம்களுக்குரிய நேர்வழிகாட்டல்களை கற்றுத் தருகின்றன.
எங்கும் சமாதானம் நிலவ வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது. இது குறித்து இஸ்லாம்
நிறையவே பேசி இருக்கின்றது. இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கமல்ல.
வன்முறையை வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கம். ஆயினும் இலங்கையில்
அண்மைக்காலங்களில் நடைபெற்ற சில அசம்பாவிதங்களின் விளைவாக இஸ்லாமிய மார்க்கம்
கொடூரமானதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள முஸ்லிம்களை ஏனைய மதத்தினர் தவறான
கண்ணோட்டத்தில் பார்க்கவும் அணுகவும் முற்பட்டுள்ளனர். இணக்கமான ஒரு சூழலில் இலங்கை
மக்கள் இல்லை. களுத்துறை வாழ் மக்களை இவ்வாய்வு கவனத்திற் கொண்டு, களுத்துறை
பிரதேசத்தில் இன நல்லிணக்கததை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டுள்ளன.
இதனூடாக முழு நாட்டிலும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, சுபீட்சம் மிக்க ஒரு நாட்டை
உருவாக்குவது இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது முதற்தர தரவுகளான நேர்காணல்,
அவதானம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்கால
சூழ்நிலையைப் பொறுத்தமட்டில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு மிகவும்
கீழ்மட்டத்தில் உள்ளமையை எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. முக்கியமாக இஸ்லாம்
பற்றிய தப்பபிப்பிராயத்தை அகற்றல், முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருத்தல்,
அல்லாஹ்வின் உதவியை நாடுதல் என்பன போன்ற பல விதந்துரைகளும் இவ்வாய்வில்
முன்வைக்கப்பட்டுள்ளன.