Abstract:
மனிதன் கொண்டிருக்கும் தனித்துவமானதொரு உடமைதான்; அவர்களது பண்பாடாகும். மானிட
சமூகத்தின் முக்கியமான கூறுகளில் (Trait) ஒன்றாகவும் பண்பாடு காணப்படுகின்றது. இயற்கை
சூழலில் மிருகங்கள் வளர்கின்றன. மனிதன் மட்டும்தான் பண்பாட்டுச் சூழலில் பிறந்து
வளர்கிறான்.தனது சொந்தப் பண்பாட்டை ஏளனமாக கருதுவதையும் ஏனைய பண்பாடுகளை
உயர்வாக எண்ணுவதையும் அயலினப்பற்றுவாதம் என்னும் சொல்லாடல் விளக்குகின்றது.
தென்கிழக்கு பிராந்தியத்தில் காணப்படும் இளைஞர்கள் மத்தியில் அயலினப்பற்றுவாதம் எவ்வாறு
புரையோடிப் போயுள்ளது என்பதைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். முதன்நிலை
மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் இரண்டும் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டு ஆய்வாளரால்
தரவுகள் ஆய்வாளராலும், கணனியைப் பயன்படுத்தியும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. உணவு,
பானம், உடை, உறையுள், இசை, கல்வி, பொழுதுபோக்கு என அனைத்துப் பரப்பிலும்
அயலினப்பற்றுவாதத்தின் தாக்கத்தை இளைஞர் மத்தியில் அவதானிக்க முடிகின்றது.