SEUIR Repository

பல்கலைக்கழக மாணவர்களின் பொதுநலன் சார்ந்த ஒழுக்க ஈடுபாடு: இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாணவர்களை மையப்படுத்திய ஆய்வு

Show simple item record

dc.contributor.author Mazahir, S. M. M.
dc.contributor.author Asan, A. P. M.
dc.contributor.author Husni Mohammad, M. N.
dc.contributor.author Fasna, M. S. F.
dc.date.accessioned 2019-12-12T04:29:16Z
dc.date.available 2019-12-12T04:29:16Z
dc.date.issued 2019-12-12
dc.identifier.citation 6th International Symposium 2019 on “Contemporary trends of Islamic Sciences and Arabic Studies for the nation development”. 12th December 2019. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 443-454. en_US
dc.identifier.isbn 988-955-627-196-6
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4034
dc.description.abstract இஸ்லாம் ஒரு சமூகமயப்பட்ட வாழ்க்கைநெறியாகும். முஸ்லிம் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு தனிநபரும் பொதுநலன் பேணுபவராக இருக்க வேண்டும் என இஸ்லாமிய மூலாதாரங்கள் எதிர்பார்க்கின்றன. குறிப்பாக படித்த வர்க்கம் அதிலும் குறிப்பாக மார்க்கக் கல்வியை ஆழமாகப் படித்தவர்கள் இவ்விடயத்தில் முன்மாதிரிமிக்கவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தவகையில் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்களிடையே பொதுநலன் சார்ந்த ஒழுக்கங்களின் ஈடுபடுகை எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதைக் கண்டறியும் நோக்கோடு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாணவர்களை மையமாக வைத்து, எட்டு சுட்டிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வானது, நீண்ட அவதானம் (Observation) என்ற ஆய்வு முறைமையைக் கைக்கொண்டு, அதற்கான தரவுகள் கிட்டத்தட்ட 10 மாதங்களாக இரகசியமான முறையில் கண்காணித்துப் பெறப்பட்டன. பெறப்பட்ட முதலாம்நிலைத் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டபோது மிகக் குறைந்தளவான மாணவர்களே பொதுநலன்சார் ஒழுக்கங்களில் ஈடுபாடு காட்டுவதும் மார்க்க அறிஞர்களினது கவனக்குவிப்பும் இவ்விடயங்களில் மிகக் குறைவாகக் காணப்படுவதும் பால் வேறுபாடோ மார்க்க அறிவு வேறுபாடோ இதில் செல்வாக்குச் செலுத்தாதிருப்பதும் ஆய்வின் முடிவாகத் தெரிய வந்தது. இந்நிலை ஒரு சமூகத்திற்கு ஆரோக்கியமாக இல்லாததனால் இளைய சமுதாயத்தினருக்கு பொதுநல ஒழுக்கங்களை ஊட்டுவதற்கான காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என இந்த ஆய்வு விதைந்துரைக்கின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka en_US
dc.subject இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் en_US
dc.subject இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடம் en_US
dc.subject பொதுநலன்சார் ஒழுக்கங்கள் en_US
dc.subject இஸ்லாம் en_US
dc.title பல்கலைக்கழக மாணவர்களின் பொதுநலன் சார்ந்த ஒழுக்க ஈடுபாடு: இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாணவர்களை மையப்படுத்திய ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account