Abstract:
மொழி ஒருவரின் சிந்தனைகளையும், கருத்துக்களையும் மற்றொருவருக்கு தெரிவிக்கும் மிகச்
சிறந்த ஊடகமாகும். இலங்கையில் சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் போன்ற மொழிகள் பேசப்பட்ட
போதிலும் சிங்கள மொழியே பெரும்பான்மை மொழியாகவும் அரச மொழியாகவும்
காணப்படுகின்றது. அந்தவகையில் இரண்டாம் மொழியாக சிங்களத்தினை கற்றுக்கொள்வதில்
மாணவர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இச்சவால்களை இனங்கண்டு அவற்றிற்கான
தீர்வுகளை முன்வைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும். ஆய்வுப் பிரதேசத்தில் இவ்வாறானதோர்
ஆய்;வு இடம்பெறவில்லை என்ற அடிப்படையில் ஆய்வு இடைவெளியை குறைநிரப்புவதில்
இவ்வாய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வாய்வானது முதலாம், இரண்டாம்
தரவுமூலாதாரங்களினைப் பயன்படுத்தி அளவுசார் மற்றும் பண்புசார் ஆய்வுமுறைகளை
அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் நிலைத்தரவுகள் வினாக்கொத்து,
நேர்காணல் மூலமும் இரண்டாம் நிலைத்தரவுகள் நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தளம்,
பத்திரிகைகள், ஆக்கங்கள் மூலமும் பெறப்பட்டுள்ளன. வினாக்கொத்தின் மூலம் பெறப்பட்ட
தரவுகள் Excel package என்ற மென்பொருளின் துனையுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள்
பெறப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் சிங்களம் தொடர்பான முன்னறிவின்மை, பேசுவது மற்றும்
விளங்கிக் கொள்வதில் சிரமம், எழுத்துக்களிள் குழப்பம் போன்ற பிரச்சினைகளை மாணவர்கள்
எதிர்கொள்வதாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளதுடன் அதற்கான முன்மொழிவுகளையும்
வழங்கியுள்ளார்.