Abstract:
இலங்கை பல இனங்கள், மதங்கள், மொழிகள், கலாசாரங்கள் கொண்ட பன்மைத்துவ நாடாகும்.
பன்மைத்துவம் என்பது பிரபஞ்ச ஒழுங்கில் மிகவும் இயல்பான ஒரு அம்சமுமாகும்.
இப்பன்மைத்துவங்களில் மத, இன, மொழி,கலாசரா பன்மைத்துவங்களை அடியாகக்கொண்டே
இலங்கை வரலாற்று நெடுகிலும் மதக்கலவரங்களும் இன வன்முறைகளும் நிகழ்ந்து வந்துள்ளன.
சமகாலத்தில் சமூகங்களிடையேயான பன்மைத்துவம் நாட்டின் அபிவிருத்திக்குரிய காரணியாக
கொள்ளப்படுவதற்கு பகரமாக இந்த இயல்பான வேறுபாடுகள் பிளவுக்கும் பிரச்சினைக்குமான
காரணியாகவும் சமூகங்களிடையேயான சக வாழ்வுக்கும் நாட்டின் அபிவிருத்திக்குமான
தடைக்கற்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. இதன் விளைவாக இலங்கை நாடு இவை தொடர்பான
மதக்கலவரங்களையும் இனப்பிரச்சினையையும் பல்துறைகளிலும் பல பரிமாணங்களிலும் எதிர்
கொண்டு வருகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும் என
பல்வேறு கோணங்களிலும் அதனது பாதிப்பின் பன்முகத்தன்மையுடனும் ஆராயப்பட்டுள்ள
போதிலும். இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளை அடியாகக் கொண்டு ஆய்வுகள் அமையப்
பெறவில்லை என்றே கருதமுடிகிறது. ஆதலால் இதற்கான ஆக்கபூர்வமான தீர்வினை முன்வைக்க
வேண்டியது காலத்தின் தேவை என்ற வகையில் இலங்கையில் இடம் பெற்ற மதக்கலவரங்கள்,
இன வன்முறைகளை அடையாளப்படுத்தி, இலங்கையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால்
நாட்டுக்கு ஏற்படும் பல்துறை தழுவிய பாதிப்புகளையும் இத்தாக்குதல்களுக்கு பின்னணியான
காரணிகளையும் கண்டறிந்து,மத கலவரங்களை தீர்ப்பதற்கான அல்லது குறைப்பதற்கான
வழிகளை இஸ்லாத்தின் ஒளியில் ஆய்வு ரீதியாக இவ்ஆய்வு முன்வைத்துள்ளது.பொதுவாக
காலனித்துவ காலப்பகுதி முதல் அண்மைக்காலம் வரையான மதக்கலவரங்களையும் அதற்கான
பின்னணியினையும் அதற்கான காரணங்களுடன் ஆய்விற்கு உட்படுத்துவதுடன் அதனை தீர்ப்பதில்
இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளை மையமாக கொண்டு ஆராய்வதனையும் இவ் ஆய்வில்
வரையறுக்கப்பட்டுள்ளது.