Abstract:
உலகளாவிய ரீதியில் அதிகளவான நாடுகளை பாதிக்கும் அனர்த்தமாக வரட்சி காணப்படுகின்றது. இவ்வாறே
இலங்கையிலும் வரட்சியானது பாரியளவில் தாக்கம் செலுத்தி வருகின்றது. 1935ம் ஆண்டிலிருந்தே
இலங்கையில் வரட்சியின் தாக்கம் உணரப்பட்டு வந்துள்ளது. இந்த வகையில் வரட்சியினால் ஏற்படும்
தாக்கங்கள் என்ற அடிப்படையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தை மையப்படுத்தியதாக இவ் ஆய்வு
அமையப் பெற்றுள்ளது. வரட்சியினால் ஏற்படும் தாக்கங்களை அடையாளப்படுத்துவதே இவ் ஆய்வின்
பிரதான நோக்கமாகும். இவ் ஆய்வினை மேற்காள்ள முதலாம் நிலைத்தரவுகளாக நேர்காணல், நேரடி
அவதானம் போன்றனவும், இரண்டாம் நிலைத் தரவுகளாக வளிமண்டலவியல் தரவுகள்,கமநல சேவை
நிலைய தரவுகள்,நீர்ப்பாசன திணைக்கள தரவுகள்,பிரதேச செயலக அறிக்கைகள், பத்திரிகைகள் மற்றும்
இணையதளம் போன்றவற்றிலும் தரவுகள் பெறப்பட்டன. இத்தரவுகள் யாவும் பண்பு சார், அளவு சார்
பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் Ms excel, Arc GIS போன்ற மென் பொருட்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில் வரட்சியின் அண்மைக்காலப் போக்கு, வரட்சியால் ஏற்படும்
தாக்கங்களில் சூழலியல் தாக்கங்கள், பொருளாதார ரீதியான தாக்கங்கள் மற்றும் சமூக ரீதியான
தாக்கங்கள் போன்றனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் என்பன
அடையாளப்படுத்தப்பட்டதுடன் வரட்சியின் தாக்கங்களை இழிவழவாக்குவதற்கான நடவடிக்கைகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன.