Abstract:
இன்றைய உலக நாடுகளில் பல்வேறு பிரதேசங்களில் அபிவிருத்தி இடம்பெறுகின்றன. அதுபோன்று
மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட சமூகத்தினரிடையே பொருளாதார
அபிவிருத்தி எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்து காணப்படுனகின்றதோ அதற்கு சம அளவில் சமூக சவால்களும்
அதிகரித்துள்ளன என்பதை காத்தான்குடி நகர சபை மற்றும் பிரதேச செயலக அறிக்கையின் முடிவுகளில்
இருந்து தெரியவருகின்றது. இதுபோன்ற சமூக சவால்களை குறைத்து பொருளாதார ரீதியாக காத்தான்குடி
மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த அரசியல் அமைப்புக்கள், ஏனைய நிறுவனங்களினால் பல்வேறு
செயற்பாடுகளும் யுத்திகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் சமூக
சவால்களினை தவிர்க்க முடியாதுள்ளது. கடந்த 10 வருடங்களாக காத்தான்குடி அபிவிருத்தி அடைந்து
வருகின்ற போதிலும் பொருளாதார ரீதியாக ஏற்படும் சமூக சவால்களானது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
பொருளாதார அபிவிருத்தியினால் எவ்வாறான சமூக சவால்கள் ஏற்படுகின்றன என்பதை கண்டறிவதை
நோக்காகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முதலாம் நிலைத்தரவு சேகரிப்பு
முறைகளை பயன்படுத்தி அளவுசார் மற்றும் பண்புசார் பகுப்பாய்வு முறைகளை அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. வினாக்கொத்து 54, நேர்காணல் 04, இலக்கக்குழு கலந்துரையாடல் 1
பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் பெறுபேறுகளாக தொழில் பற்றாக்குறை, சம்பளம் குறைவு, வெளிநாட்டு
வேலைவாய்ப்பினை நாடல், உளவியல் பிரச்சினைகள், பாரிய தொழிற்சாலைகள் இன்மை, இடப்பற்றாக்குறை
மற்றும் ஏனைய பல சவால்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வு பொருளாதார ரீதியாக சமூகம்
எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுவதனூடாக அதனை குறைப்பதற்கான ஆலோசனைகளையும்
வழிகாட்டல்களையும் முன்வைப்பதாகவும் அதற்கு ஏனைய சமூக அமைப்புக்களினது செயற்பாடு எவ்வாறு
அமைய வேண்டும் என்பதையும் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு ஆய்வினை மேற்கொள்வோருக்கு
வழிகாட்டியாகவும் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.