Abstract:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையுடையது சங்கச் செவ்வியல் காலம். பாட்டும் தொகையுமாகிய
சங்க நூல்களுள் நற்றிணை முதலிடம் பெற்றுள்ளது. நற்றிணை நானூறு என வழங்கப்பெறும் நற்றிணைப்
பாடல்களில் சங்கச் சான்றோர்களின் மனிதநேய உணர்வுகள் மேலோங்கி நிற்கின்றன. மனிதன் சகமனிதனிடத்து
வெளிப்படுத்தும் மனிதநேயம், மனிதன், மனிதன் அல்லாத பிறஉயிர்களிடத்து காட்டும் மனிதநேயம் என்று மனித
மனத்தில் பொதிந்து கிடக்கும் அன்பு, அருள், இரக்கம், அரவணைப்பின் மூலமாக வெளிப்படுகின்ற மனிதநேயம்
நற்றிணை முழுவதும் பரந்து காணப்படுகிறது. நற்றிணை வழி வெளிப்பட்டுள்ள சங்கச் சான்றோர்களின் மனிதநேய
உணர்வுகளை வெளிக்காண்பிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.