Abstract:
சமகால சமூகப் பிரச்சினைகளுள் தற்கொலை மிகவும் முக்கியமானதாகும். ஆய்வாளர்கள் என்ற வகையில்
தற்கொலை நோக்கி எமது கவனத்தை செலுத்துவது காலத்தின் தேவையாகும். பல்வேறுபட்ட சமூக
நிகழ்வுகளுள் சமூகப் பிரச்சினைகள் சமுதாயத்தில் பாரிய நெருக்குதல்களை ஏற்படுத்தி வருகின்றன. சமூகக்
குற்றங்கள், போதைப் பொருள் பாவனை, எயிட்ஸ், சிறுவர் துஸ்பிரயோகம் என பட்டியல் படுத்தக் கூடிய சமூகப்
பிரச்சினைகளின் மத்தியில் ‘தற்கொலை’ என்பது சமூகத்தில் வேறாரு பரிமாணமாகும். தற்கொலை நிகழாத
காலமோ, சமுதாயமோ உலகில் எங்கும் இல்லை. தற்கொலையை மேற் கொள்ளுதலானது ஒரு தனிமனிதனது
செயலாகக் காணப்பட்டாலும் அது ஒரு சமுதாய நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இதன்படி ஒரு மனிதன்
பிரச்சினையை எதிர்நோக்குகின்ற பொழுது, அப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கத் தெரியாமல் தற்கொலை
முடிவெடுக்கின்றான். இதனால்தான் தற்கொலை தடுப்பு முறையானது மிகவும் முக்கியமான ஒன்றாக
இருக்கின்றது. இதில் உளவளத்துணை சேவையானது தற்கொலை தடுப்பு முறைகள் அவசியமான ஒன்றாக
காணப்படுகின்றது. உளவளத்துணையானது உளவியலின் பிரிவுகளில் ஒன்றாக இருக்கின்றது. இது
பிரச்சினைக்கு உற்பட்டவரை அவராக அவரது பிரச்சினையை உணரவைத்து அப் பிரச்சினைக்கான தீர்வை
அவராக தடுப்பதற்கு உதவுகின்ற ஒரு முறையாக உளவியலில் உளவளத்துணை காணப்படுகின்றது. இவ்
ஆய்வின் தலைப்பானது, ‘தற்கொலையும் அதனை தடுப்பதற்கான உளவளத்துணையின் அவசியமுமாக
இருப்தால் இவ் ஆய்வில் தற்கொலை என்றால் என்ன? அதன் வகைகள் எவை, இது ஒரு சமூகப்பிரச்சினையா,
தற்கொலை நடைபெறும் இடங்கள், தற்கொலையை தடுப்பதற்கான முறைகள் விளக்கப்பட்டுள்ளதோடு
உளவளத்துணையின் ஏன் அவசியமானதாக காணப்படுகின்றது, என்பதை பேசுவதாக இவ் ஆய்வானது
உள்ளது. இவ் ஆய்வின் முறையியலாக விபரிப்பு முறை, ஒப்பீட்டு முறை, பகுப்பாய்வு முறை, போன்றன
காணப்படுகின்றன. மேலும், இவ் ஆய்வானது இரண்டாம் நிலைத்தரவுகளை மையப்படுத்தியதாக அமைவதோடு,
பண்பு ரீதியான ஆய்வாக உள்ளது. இவ் ஆய்வானது சமூகத்தில் காணப்படுகின்ற முக்கியமான பிரச்சினைகளில்
ஒன்றான தற்கொலையை தடுப்பதற்கான முறைகளில் உளவளத்துணையின் அவசியத்தை வெளிக்
கொணர்வதற்கு முற்படுகின்றது.