dc.contributor.author |
அருந்தவராஜா, க. |
|
dc.contributor.author |
மங்களரூபி, சி. |
|
dc.date.accessioned |
2019-12-14T08:51:22Z |
|
dc.date.available |
2019-12-14T08:51:22Z |
|
dc.date.issued |
2019-11-27 |
|
dc.identifier.citation |
9th International Symposium 2019 on “Promoting Multidisciplinary Academic Research and Innovation”. 27th - 28th November 2019. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. |
en_US |
dc.identifier.isbn |
978-955-627-189-8 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4055 |
|
dc.description.abstract |
வடஇலங்கையில் பல்லின மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வந்தாலும்கூட அவர்களில் இப்பகுதியில்
பெரும்பான்மையாகக் காணப்படுகின்ற தமிழ் மக்கள் அவர்களுக்கே உரிய தனித்துவமான சிறப்பான பண்பாடு
சார்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனரென்பதனை வரலாறு கூறும். அதேநேரத்தில் இவர்கள் தாம் வாழ்ந்த
காலத்தில் எதிர்மறையான சில பண்பாட்டு அடையாளங்களை உள்வாங்கிக் கொண்டவர்களாக
வாழ்ந்துள்ளனரென்பதும் கவனிக்கத்தக்கது. இவற்றினையும்கூட அவர்களது பண்பாட்டின் ஒரு வடிவமாகவே
பார்க்க முடியும். இவற்றினை நாம் தற்காலத்தில் பிற்போக்கான தன்மை கொண்ட சில அடையாளங்களாகவும்
இனங்காணலாம். இத்தகைய பண்பாட்டின் எதிர்மறையான அடையாளங்கள் சிலவற்றினை யாழ்ப்பாண அரசிற்கு
முற்பட்ட காலத்திலிருந்து தற்காலம்வரையான காலத்திலும்கூட அவர்களிடமிருந்து முற்றாக அகற்ற முடியாமல்
உள்ளதென்பதே ஆச்சரியம். மேற்குறித்த இத்தகைய பண்பாட்டு எதிர்மறையான அடையாளங்களைக்
காலனித்துவ ஆட்சியாளரான ஆங்கிலேயரது காலத்திலும்சரி நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னராகத்
தொடர்ச்சியாகப் பின்வந்த ஆண்டுகள் சிலவற்றிலும்சரி எம்மால் தொடர்ச்சியாக இனங்காண முடிகின்றது.
அவ்வகையில் இலங்கை சுதந்திரமடைவதற்கு சிலகாலம் முன்னதாக வடஇலங்கையிலிருந்து வெளிவர
ஆரம்பித்த ஈழகேசரி என்ற தமிழ் வார வெளியீடானது சுதந்திரம் அடைந்ததன் பின்னராகவும் வெளிவந்து
அக்கால வட இலங்கையில் வாழ்ந்துவந்த தமிழ்ச் சமுதாயத்தினைப் படம் பிடித்துக் காட்டியிருந்தது.
முற்போக்குச் சிந்தனையினைக் கொண்ட இப்பத்திரிகையானது அக்கால வடஇலங்கைத் தமிழர்களது சமூகக்
கட்டமைவின் ஒவ்வொரு தளத்தினையும் அடையாளப்படுத்தியது. மேலும் அக்கால வட இலங்கையில் வாழ்ந்த
தமிழ்ச் சமூகத்தினது வரலாற்றினை அறிய விரும்புகின்ற எவரும் ஈழகேசரியினை ஒரு ஆதாரமாகப்
பயன்படுத்தாமல் அப்பால் செல்ல முடியாது. காரணம் அக்காலத் தமிழ் மக்களது சமூகக் கட்டமைவுகள்,
அவர்களது பண்பாடுகள், பாரம்பரியங்கள், பொருளாதாரநிலை, கல்விநிலை போன்ற பல்வேறு விபரங்களை
இப்பத்திரிகை தருகின்ற தகவல்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே அக்கால வடஇலங்கைத்
தமிழ்ச் சமுதாயத்தினது (ஈழகேசரிகால) எதிர்மறையான சில பண்பாட்டு அடையாளங்கள் வரலாற்றில்
பெற்றிருந்த முக்கியத்துவத்தினை இப்பத்திரிகையின் மூலமாக எடுத்துக்காட்டுவதே ஆய்வினது பிரதான
நோக்கமாக உள்ளது. வரலாற்று ஆய்வாளன் ஒருவனைப் பொறுத்தவரை அவன் ஆய்வில் தான் சார்ந்த
சமூகத்திற்குச் சாதகமான ஆய்வினை மட்டுமே மேற்கொள்வதென்பது தவறானது. இத்தகையதொரு
பின்னணியிலேதான் ஆய்வாளரால் வடஇலங்கைச் சமுதாயத்தின் ஈழகேசரிகால எதிர்மறையான பண்பாட்டு
அடையாளங்கள் சில வெளிக்கொணரப்படுகின்றது. முழுக்க முழுக்க வரலாற்று அணுகுமுறையினடிப்படையில்
விமர்சன ஆய்வாக அமைந்த இவ்வாய்வில் ஈழகேசரி பத்திரிகையே ஆய்வில் பிரதான இடத்தினைப்
பெறுவதனால் அது ஆய்வில் முதற்தர ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதேநேரத்தில் பின்னாளில்
இப்பத்திரிகை தொடர்பாகவும் வடஇலங்கைத் தமிழ் சமூகந் தொடர்பாகவும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள்,
இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள், நேர்காணல்கள், அவதானிப்புக்கள், களஆய்வுகள் போன்றனவும்
ஆய்வினது முக்கியத்துவம் கருதி மேலதிகத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வடஇலங்கைத் தமழர்களின்
எதிர்மறையான சில பண்பாட்டு அடையாளங்களை வெளிக்கொணர்வதில் ஈழகேசரிக்கும் பங்கிருந்ததென்பதே
ஆய்வின் கருதுகோளாக அமைகின்றது. பொதுப்படப் பார்த்தால் ஈழகேசரிப் பத்திரிகையானது ஆய்விற்குரிய
பிரதேசத்திலிருந்து ஆய்விற்குரிய மக்கள் தொடர்பாக ஒரு சமகாலத்துப் பத்திரிகையாக வெளிவந்தமையினால்
அவை தருகின்ற தரவுகள் பெருமளவிற்கு உண்மையானவையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
இதனால் அது கூறுகின்ற தமிழர்களது பண்பாடு பற்றிய எதிர்மறையான அடையாளங்களும் நிஜமானாதாக
இருப்பதற்கான சந்தர்ப்பங்களும் அதிகம். |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. |
en_US |
dc.subject |
தமிழ் சமூகம் |
en_US |
dc.subject |
பாரம்பரியங்கள் |
en_US |
dc.subject |
சுதேசக் கல்வி |
en_US |
dc.subject |
ஆலயப் பிரவேசம் |
en_US |
dc.subject |
பிரதேசப் பத்திரிகை |
en_US |
dc.title |
வட இலங்கைத் தமிழர்களது சமுதாய வாழ்வியல் பண்பாட்டின் எதிர்மறையான சில அடையாளங்கள்: ஈழகேசரிப் பத்திரிகை வெளிவந்த காலத்தினை (1930-1958) அடிப்படையாகக் கொண்டது |
en_US |
dc.title.alternative |
ஈழகேசரிப் பத்திரிகை வெளிவந்த காலத்தினை (1930-1958) அடிப்படையாகக் கொண்டது |
en_US |
dc.type |
Article |
en_US |