dc.description.abstract |
இந்த ஆய்வானது திருகோணமலை மாவட்டத்தின் மூதுார் பிரதேசம், பல்வேறு மூலங்களில் இருந்து
வெளியேற்றும் பொருளாதார பெறுமதியற்ற, திரவமல்லா பொருட்கள் பல்வேறு இடங்களில் சேர்வதன் மூலம் பல
சமூக மற்றும் சூழலியல் பிரச்சினைகள் உதயமாகி வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. அந்த
வகையிலே இவ் ஆய்வானது மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக 2000 ஆண்டுக்கு பின்பு, இவ்வாய்வுப்
பிரதேசம் பல வழிகளிலும் பாரிய அபிவிருத்திக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றமையினால், வீடுகள்,
வைத்தியசாலை, சந்தை, நகர்பிரதேசக் கழிவுகள், விற்பனை நிலையக் கழிவுகள், விலங்குகள் மூலம்
வெளியேறும் கழிவுகள், பொதுக் கழிவுகள் என்றும் பல மூலங்களில் இருந்து கழிவுகள் ஒன்று சேர்க்கப்பட்டு
வருவதைக் காணமுடிகின்றது. இக் கழிவுகளில் கட்டிடம்சார் கழிவுகளும், இலத்திரனியல் கழிவுகளும்,
விலங்குசார் கழிவுகளும் பாரிய பிரச்சினைகளை மூதுார் பிரதேசத்தில் தோற்றுவிக்கின்றன. மேலும் இக்
கழிவுளை சேகரிக்கும் வேலைத் திட்டத்தினை மூதுார் பிரதேச சபையானது கொண்டுள்ள 42 கிராம சேவகர்
பிரிவில் 18 கிராம சேவகர் பிரிவிலேயே இக் கழிவுகள் ஒழுங்கான முறையில் சேகரிக்கப்படுகின்றன. இது மூதுார்
நகரை அண்டிய 12 பிரதேசங்களிலும் தோப்பூரை அண்டிய 6 பிரதேசங்களிலும் கேசகிக்கட்ப்படுகின்றது.
இவ்வாறு சேகரிப்பதுடன் தொடர்புடைய பல பிரச்சினைகள் பல தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக
இங்கு அடையாளம் காணக் கூடிய பிரச்சினைகளாக, நிலையான தரைக் கீழ் நீர் மாசடைதல், துர்நாற்றம்
வீசுதல், மண் வளம் இழத்தல், உயிரினங்கள் அழிவடைதல், அழகியல் தொடர்பான பிரச்சினைகள், தொற்று
நோய்கள் பரவுதல் போன்ற பல நேரடி மறைமுகப் பிரச்சினைகளை இவ் ஆய்வுப் பிரதேசத்தில் காண
கூடியதாக உள்ளன. எனவே, இப்பரிச்சினைகளைக் குறைப்பதற்கு உள்ளுராட்சி மன்ற சட்டம் மற்றும் தேசிய
ரீதியில் மேற்கொள்ளப்படுட்டுவருகின்ற நடைமுறைகளை இவ் ஆய்வுப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தல்.
(LGA) LGA – 129 / 130 / 131 மற்றும் LGA 118 / 119 / 120 (NAPS ) இத் திட்டத்தினை சரியா முறையில்
நடைமுறைப்படுத்துவதன் மூலமும் ஆய்வுப் பிரதேசத்தில் சேரும் திண்மக் கழிவுகளைக் குறைப்பதுடன்,
அதனால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளையும் குறைத்துக் கொள்ளாம். மேலும் ஆய்வுப் பிரதேசத்தில் சேரும்
திண்மக் கழிவுகளை குறைப்பதற்கான மாற்று அலோசனைகளும் வழிகாட்டல்களும் இவ் ஆய்வில் பரிந்துறை
செய்யப்டுகின்றது. இதன் அடிப்படையில் ஆய்வு பிரதேசத்தில் முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளை
சேகரித்து இத்தரவினை புவியியல் தகவல் முறைமை (GIS) மற்றும் Excel முறையைப் பயன்படுத்தி சரியான
பகுப்பாய்வினை மேற்கொண்டு. பல பிரச்சினைகளையும் அதன் உண்மைத் தன்மையினையும் அடையாளம்
காணப்பட்டிருக்கின்றது |
en_US |