Abstract:
நாகரீகங்களின் தோற்றம், வளர்ச்சியில் குறித்த பிராந்தியத்தின் புவியியல் அமைவிடம், மற்றும் பொருளாதாரச்
செல்வாக்கு என்பன முக்கியம் பெறுகின்றன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அதன் சமூக அடுக்குகள்
சாதியை மையப்படுத்தியதாகவே காணப்பட்டது. தன்தொழில் விட்டவன் சாதியில் கெட்டவன் எனும்
அடிப்படையில் இம்மக்களது வாழ்வியல் நடவடிக்கைகளும் அமைந்தன. அவ்வகையே யாழ்ப்பாண மக்களிடத்தே
நகைகள் ஓர் சமூக அடையாளமாகவும் சடங்கு சார் நடைமுறைகளுடனும் தொடர்புபட்ட ஒன்றாக விளங்கியது.
ஆய்வில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 1900 களின் பின் தட்டார்களின் சமூகநிலை மாற்றங்கள்,
வடிவமைப்பு ரீதியான தனித்துவங்கள், என்பவற்றில் ஏற்பட்ட நவீனமயமாதலின் தாக்கம் அவர்களது வரலாறு
பற்றிய தேடலை அடையாளப்படுத்த வழிகோலியது. விஸ்வகர்ம வழித்தோன்றலில் தட்டார்களும் முக்கியம்
பெறுகின்றனர். இவர்கள் விஸ்வஜ்னா என்ற பிாிப்புள் அடங்கும் நபா்களாக பொன் மற்றும் வெள்ளி கொண்டு
அணிகலன்களை உற்பத்தி செய்யும் கைவினைஞா்களாகவூம் காணப்பட்டனா். யாழ்ப்பாணத்தில் பல
பிராந்தியங்களில் குறிப்பாக பருத்தித்துறை, சாவகச்சேரி, சங்காணை, வண்ணாப்பண்ணை, கொக்குவில்,
கல்வியங்காடு. கட்டப்பிராய், அச்சுவேலி, தெல்லிப்பளை ஆகிய இடங்களில் நகை உற்பத்திகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அழகுக்காக மட்டுமன்றி சமய சடங்குகள், விஸ்வகர்ம குலத்தின்
அடையாளம், அந்தஸ்து மற்றும் பாரம்பரியங்களுடன் இணைந்து இன்று வரை சாதியை அடையாளப்படுத்தும்
வகையில் நாச்சிமார் கோயிலை அண்டிய பகுதியில் வாழும் தட்டார் சமூகத்தினர் காணப்படுகின்றனர். வரலாற்று
ஆய்வுகளில் ஒரு நாட்டில் வாழ்கின்ற ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் நிலைத்திருத்தலில் மரபு ரீதியான
பாரம்பரியத் தொழில்கள் பற்றிய வாசிப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதும் யாழ்ப்பாணத்தில் காணப்படும்
நாச்சிமார் கோயிலை மையப்படுத்தி வாழும் தட்டார் சமூகம் பற்றியும் அவர்களது பாரம்பரிய உற்பத்தி
முறைகள் பற்றியும் எதுவித எழுத்துக்களும் கொண்டுவரப்படவில்லை. இவ் இடைவெளியினை கண்டறிதலூடாக
இலங்கையின் கலை வரலாற்றுப் பரப்பில் பாரம்பரியமாக நாச்சிமார் கோயிலை மையப்படுத்தி வாழும்
தட்டார்கள் யாவர்? அவர்களது பண்பாடு, சமூகநிலவரங்கள், உற்பத்தி நிலவரங்கள், கைவினைஞர்கள்,
நகைகளின் வடிவமைப்பு பற்றிய விடயங்களை அச்சமூகத்தவா்களின் அனுபவங்களை அடிப்படையாகக்
கொண்டு வாசித்தலாக இவ்வாய்வு அமைகிறது.