Abstract:
உயர் கல்வி வழங்குவதில் அரச பல்கலைக்கழகங்களின் வகிபாகம் மகத்தானது. பல்கலைக்கழகம் என்றாலே
ஆய்வு என்று சொல்லுமளவுக்கு இரண்டுக்குமிடையே நெருக்கமான தொடர்பு உண்டு. பல்கலைக்கழக
மாணவர்களுக்கு மத்தியில் ஆய்வுக் கலாசாரம் என்பது மிக முக்கியமானதொன்றாகும். அவர்கள்
பல்கலைக்கழகங்களில் படிக்கின்ற காலங்களில் முதலே ஆய்வுகளுடன் பின்னிப் பிணைந்திருப்பது
அவசியமாகும். ஓர் பட்டதாரி ஓர் ஆய்வாளராகவே அன்றி இருக்க முடியாது. இதன்போது ஒரு பட்டதாரி
சமூகத்தைப் பார்க்கின்ற போது, சமூகம் சார் பிரச்சினைகளில் நுழைகின்ற போது அவர் ஆய்வுப் பின்னணியில்
நின்றே நோக்க வேண்டியது அவசியமாகும். இந்தவகையில், இலங்கை பல்கலைக்கழகங்களில் தென்கிழக்குப்
பல்கலைக்கழகமானது தேசிய நீரோட்டத்தில் இருந்து தேசிய மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு காத்திரமான
ஆய்வுகளை முன்வைக்க வேண்டிய பொறுப்புள்ள நிறுவனம் என்றவகையில் இப்பல்கலைக்கழக இஸ்லாமிய
கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடம் இங்கு ஆய்வூப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வில்
மாணவர்களுக்கு மத்தியில் ஆய்வின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதே பிரதான நோக்கமாகும். குறித்த
பீடத்தில் மூன்று வருட காலத்துக்குள் ஆய்வூக் கலாசாரம் மேம்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிவதே ஆய்வுப்
பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்விற்காக 2016-17 கல்வியாண்டில் கற்றுக்கொண்டிருந்த
மூன்றாம் வருடத்தைச் சேர்ந்த மாணவர் ஆய்வு மன்ற உறுப்பினர்கள் 50 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர்.
சமூகவியல் பண்புசார் ஆய்வான இதில் ஆய்வுப் பிரதேச மாணவர்கள் மூலம் பெறப்பட்ட வினாக்கொத்து,
விரிவுரையாளர்கள் மூலமான கலந்துரையாடல் போன்ற முதலாம் நிலைத் தரவுகளின் ஊடாக குறித்த பீடத்தில்
கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஆய்வுக்கலாசாரம் மேம்பட்டுள்ளதா என்பதை இனங்கண்டு ஓர்
விபரண ஆய்வாக முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆய்வுக் கலாசாரம் மேம்பட்டுள்ளது எனவும் அதற்காக
மாணவர் ஆய்வு மன்றம் பங்களிப்பு செய்துள்ளது என்பதுவே இந்த ஆய்வின பிரதான கண்டறிதல்களாகும்.