Abstract:
குழந்தை உ ளவியலில் ஜீன் பியாஜேயின் அறிகைக் கோட்பாடு புதிய
பரிணாமத்தினைக் கொண்ட தாகும். இதுவரை காலமும் இருந்துவந்த குழந்தை நோக்குமுறை மற்றும் குழந்தைக் கல்வி முறையியல் என்பனவற்றை இவர் திருத்தத்திற்கு உள்ளாக்கினார். உளவியல், உளவளத்துணை மற்றும் கல்வியியல் போன்ற துறைகளி்ல் இவரது சிந்தனைகள் அதிக பங்களிப்புச் செய்கின்றன. குறிப்பாக இவரது அறிகை விருத்திக கோட்பாடானது கல்வித்துறையில் நடை முறைப் பயனபாட்டினைக் கொண்ட தாக கருதப்படுகிறது.
அவ்வகையில் பியாஜேயின் அறிகை விருத்தி பற்றியும் அதன் கலவியியல் பிரயோகப் பயன்பாடு பற்றியும் இவ்வாய்வு கவனம் செலுத்துகின்றது.