Abstract:
ஆரம்ப காலத்திலிருந்தே அறிவைப் பெறுவதும் அவ்வறிவைப் பிரயோகிப்பதும் முக்கியமாகக் கருதப்பட்டது. இப்பணியில் மேலைத்தேயச் சிந்தனையாளர்களும் கீழைத்தேயச் சிந்தனையாளர்களும் அதிக ஈடுபாடு காட்டினார்கசர். குறிப்பாக கீழைத்தேயச் சிந்தை மரபில் சங்கமருவியகால சிந்தனையாளனர்களர் வாழ்க்கையையே தத்துவமாக (Living Philosophy) கருதியதன் காரணமாக மனித வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு கூடியளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஒழுக்க ரீதியான வாழ்க்கை அவசியம் என்பதை வலியுறுத்தும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை கூறுகின்ற ஒழுக்கக் கருத்துக்கள் மிகவும் பெறுமதியானவைகளாகும். தனிமனிதன் முதல் சமூகம் வரை அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் அம்சங்களை நடைமுறை ரீதியாக. வலியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது என்பதை எடுத்துக் கூற இவ்வாய்வு முற்படுகிறது.